Sunday 16 September 2018

*Rev.சாமுவேல் பாக்கியநாதன்* IMS மிஷனரி

பணித்தளமானதோர்ணக்கல் தனி பேராயமாக உருவாக்கப்பட்டபோது 1903 ல் IMS தொடங்கப்பட்டதுமுதல் அயராது பாடுபட்டவரும் யாரும் தோர்ணக்கல் பகுதிக்கு மிஷனரியாகச் செல்ல முன்வராதபோது சீனியர் குருவானவராக இருந்தபோதும் தாமே அங்கு முதல் மிஷனரியாகச் சென்றதோடு திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து அநேகரை மிஷனரிப்பணிக்கு அங்கு அழைத்துச் சென்றவர் Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள். புதிய
தோர்ணக்கல் திருமண்டலத்திற்கு பேராயராக யாரைப் போடுவது என பரிசீலிக்கப்பட்டபோது Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் பெயரை பரிசீலனைக்கு எடுத்தபோது மிஷன்கணக்குககளில் உண்மையும் கண்டிப்பும் உள்ள சீனியரான சாமுவேல் பாக்கியநாதன் நமக்கு வளைந்து கொடுக்க மாட்டார் அவரைப் போட வேண்டாம் என மேல்மட்டத்தில் உள்ளோர் அக்கூட்டத்தில் பேசியதும் அதனால் அவரது பெயர் நீக்கப்பட்டதும் வரலாற்றுண்மை. நெல்லை அப்போஸ்தலர் கனம். ரேனியஸ் ஐயரவர்கள் நீண்ட நெடுங்காலம் நெல்லை திருமண்டலத்தால் நினைவுகூறப்படவில்லை நெல்லை திருமண்டல இருநூற்றாண்டுவிழா 1980 ல் கொண்டாடப்பட்டபோது தான் அவர் நினைவுகூறப்பட்டார்.1980 முதல் திருமண்டல ஆண்டுவிழா மாம்பழச்சங்க நிகழ்வின் முதல் நாள் செவ்வாயன்று கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் கல்லறைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்புஜெபம் அங்கு ஏறெடுக்கப்படுகிறது. அதுபோன்று IMS ன் தொடக்கத்திற்கு காரணமானவரும் அதன் முதல் மிஷனரியுமான Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் நீண்டநாள் நினைவுகூறப்படவில்லை.
2003 ல் IMS நூற்றாண்டு கொண்டாடப்பட்டது முதல் நினைவுகூறப்பட்டு வருகிறார்.
*பாலியர்சங்கநிறுவனர் Rev.சாமுவேல் பாக்கியநாதன்*
நெல்லை திருமண்டலத்தின் முக்கிய அங்கமான பாலியர் சங்கத்தை நிறுவியவர் Rev.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் மேலும் பாலியர்சங்க ஊழியத்தை ஒன்றுபட்ட திருநெல்வேலி திருமண்டலமெங்கும் (தற்போதைய திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்கள்) அனைத்து கிராமசபைகளுக்கும் கொண்டு சென்றவர் அவரே.
அத்துடன் பாலியர் சங்கப்பாடலான *பாலர்ஞாயிறிது பாசமாய் வரும்*
*பாடி இயேசுநாமம் பணிந்து போற்றும்*
என்ற சுமார் 110 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய இனிமையான பாலியர்சங்க கருத்து பாடலை இயற்றி இசையமைத்து பாலியர்சங்க ஊழியம் மூலமாக அப்பாடலை நெல்லைத்திருமண்டல அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களே அப்பாடல் கிறிஸ்தவ இலக்கிய சங்க CLS வெளியீடான கிறிஸ்தவ கீர்த்தனை பாடல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
*Rev.சாமுவேல்பாக்கியநாதன் குடும்பம்*
கனம்.சாமுவேல் பாக்கியநாதனின் தந்தை வழி முன்னோரின் பூர்வீக ஊர் திசையன்விளை அருகிலுள்ள மகாதேவன்குளம்
அங்குள்ள வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்வைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட தியாகசீலரான சபைஊழியர் பாக்கியநாதன் உபதேசியார் அவர் CMS மிஷன் சபைஊழியர் பணி காரணமாக மகாதேவன்குளத்தை விட்டு மருதகுளம் வட்டாரத்திற்கு வந்தார்கள்.
பாக்கியநாதன் உபதேசியாருக்கு அநேக பிள்ளைகள் அனைவரும் ஊழியம் செய்தவர்கள் கனம்.சாமுவேல் பாக்கியநாதன்
கனம்.சாலமோன் பாக்கியநாதன் ஆகிய இருவரும் CMS மிஷனரி ஊழியம் மூலம் நெல்லை திருமண்டலத்திற்கு வந்த குருவானவர்கள்.
மருதகுளம் ஆழ்வாநேரி வட்டாரத்தில் சாட்சியான வாழ்வு வாழ்ந்த ஊழியக்காரக் குடும்பம் இக்குடும்பத்திற்கு அவ்வட்டாரத்தில் இருந்த நற்பேரும் சாட்சியுமே ஐரோப்பிய குருக்களின் வலிமையான அழுத்தத்தின் மத்தியிலும் இவ்வட்டார சபைகள் CMS சுத்தாங்க சுவிசேஷ சபையைச் சார்ந்து நிற்க காரணமாயிற்று.
கரிசல் சபைஊழியர் சுவிசேஷகர்.
தாவீது அய்யா அவர்களுக்கு இடையன்குளம் கரிசல் வட்டாரங்களில் இருந்த நற்பேறு சாட்சி இவ்வட்டார சபைகள் செவல் சர்க்கிள் உருவாக்கப்பட்டு Rev.G.செல்வின் ஐயரவர்கள் (பிற்கால பேராயர்) நேரில் இப்பகுதியில் சமாதான முயற்சிகளில் இறங்கினபோதும் CMS சுத்தாங்க சுவிசேஷ சபையைச் சார்ந்து கொள்ளக் காரணமாயிற்று.
கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் மற்றும் அவர்களது சகோதர சகோதரியரின் பின்சந்ததி குடும்பங்கள் மூன்றடைப்பிற்கும் மருதகுளத்திற்கும் இடையிலுள்ள தம் மூதாதை பாக்கியநாதன் பெயரைத் தாங்கிய பாக்கியநாதபுரம் கிராமத்தில் இன்றளவும் வசித்து ஊழியம் செய்து ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment