Sunday 16 September 2018

தேவமனிதன் டேவிட் பிரெய்னார்டு

"கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்"
"உமக்காக ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே"
திருச்சபையின் ஆராதனைகள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை.

திருநாட்கள் கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்தே திருச்சபைகளில் ஆசரிக்கப்பட்டு வந்துள்ளது. அதைப் பின்பற்றியே நாம் ஆசரிக்கிறோம்.
திருநாள் - வானகப் பிறப்பு நாள். அதாவது கிறிஸ்துவுக்காய் கோதுமை மணியாய் (இரத்த சாட்சியாய்) மரித்த நாள் or நினைவு கூறும் நாள்.
திருநாட்களில் கிறிஸ்துவுக்காய் உழைத்த, மரித்த ஆதி அப்போஸ்தலர்களை நினைவு கூறுகிறோம். அவர்களுடைய வாழ்க்கை, கிறிஸ்துவுக்காய் பட்ட பிரயாசங்கள், சாட்சியாய் மரித்த காரியங்களை நினைவு கூறுகிறோம். நாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காய் பிரயாசப்பட, அவருக்காய் ஜீவன் கொடுக்கும் அளவிற்கு அன்பு வைக்க அழைக்கப்படுகிறோம். எனவே திருச்சபைகளில் திருநாட்கள் ஆசரிக்கப்படுகிறது.
ஆதி அப்போஸ்தலர்களின் தியாக வாழ்க்கை, நாமும் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து, அவருக்காய் பெரிய காரியங்களைச் செய்ய நம்மை தூண்டுகிறது.
தேவமனிதன் டேவிட் பிரெய்னார்டு தனது 29ம் வயதில் காசநோயால் மரித்தார்.
4 வருடங்கள் தான் செவ்விந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்தார்.
அவருடைய வாழ்க்கை, "ஹென்றி மார்ட்டின்", "டேவிட் பெய்சன்" போன்ற மகத்தான மிஷனெரிகளை உருவாக்கியது.
அப்போஸ்தலர்களின் இரத்த சாட்சியான மரணத்தை விளக்கும் விதமாக "Altar cloth, Vestments"  Red colour போடப்படுகிறது. பாடகர் குழுவினர்  சிவப்பு நிற அங்கி அணிவதும் இதற்காகத் தான்.

No comments:

Post a Comment