Sunday 16 September 2018

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

Copied and pasted from Rev Augustine Jeevakani

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா
17-08-1874.   -   01-01-1945

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ஆம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை தாமஸ் வேதநாயகம் ஆங்கிலிக்கன் சபையில் ஆயராக இருந்தார். அவருடைய தாயார் பெயர் எல்லன்( Mrs. Ellen ).அவருடைய மூதாதையர்கள் மிகவும் தீவிரமான சிவபக்தர்கள். தாமஸ் 1839 ஆம் ஆண்டு CMS பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவரானார். தாமஸ் - எல்லன் தம்பதியருக்கு மூத்த மகள் பிறந்து 13 ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆண் மகன் பிறந்ததால் அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள். 1889 ஆம் ஆண்டு அவருடைய தகப்பனார் மரித்தார். அன்றிலிருந்து அவருடைய தாயார்தான் அக்குடும்பத்தைக் காப்பாற்றினார்.

சாமுவேல்சன் அவருடைய தாயார் மெய்ஞானபுறத்திலிருந்த உண்டு உறையுள் பள்ளிக்கு ( Boarding School )  படிக்க அனுப்பினார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின் சென்னை சென்று சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் (  Madras Christian College  ) சேர்ந்து படித்தார். அப்போது அக்கல்லூரியின் முதல்வர்இவரைத் தனிமைப்படுத்திச் சிறப்பிக்கும் வண்ணம் இவருக்கு அசரியா என்று பெயரிட்டார். அங்கு திருச்சபையில் பின்னாளில் மிகவும் சிறந்து விழங்கிய K T Paul உடன் நட்புக் கிட்டியது. மேலும் அமெரிக்க அருள் தொண்டரான Sherwood Eddy யின் நட்பையும் பெற்றார். இருவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாகவே இருந்தனர்.

கல்லூரியில் இறுதித் தேர்வு சமயம் மிகவும் நோயுற்றதால் இறுதித் தேர்வு எழுதவில்லை. பின்னர் முயர்ச்சிக்கவுமில்லை. B. A. பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் கேலியாக " நானும் BA தான் - Born Again Christian என்பவாராம்.

தமது 19 ஆம் வயதில் YMCA நற்செய்தியாளர் ஆனார்.
இதன் மூலம் இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும்சென்று தமிழர்களுக்கு நற்செய்தி கூறினார்.தொடர்முயற்சிகள் மூலம் இந்தியர்களே நற்செய்தி அறிவிக்கும் வண்ணம் " இந்திய அருள்பணிக் கழகத்தை  ( Indian Missionary Society) திருநெல்வேலியில் உருவாக்கினார்.

YMCA செயலராக1895 - 1909 வரை பணிபுரிகையில்கிறிஸ்தவத் திருப்பணியில் " தன்னாட்டுமயமாதலைச் " ( Indigenization ) வலியுறுத்தினார்.

1905 ஆம் ஆண்டு செராம்பூரில் தேசிய அருள்தொண்டுக் கழகம் ( National Missionary Society) உருவாக்கப்பட்டது. அதற்கு சரியாகவே செயலராகப் நியமிக்கப்பட்டார். இக்கழகத்தின் மூலம் ஆப்கானிஸ்தான், திபெத், நேபாளம் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்தார்.

1907 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக்க் கிறிஸ்தவ மாணவர் இயக்க ( World Student Cristian Federation) மாநாட்டில் பங்குபெற்றார்.

1898 ஆம் ஆண்டு அன்பு மாரியம்மன் என்பவரைத் திருமணம் செய்தார். வெறும் 40 ரூபாயில் வரதட்சணை வாங்காமல் முடித்தார். அத்தம்பதியருக்கு 4 ஆண்கள் 2 பெண்கள் பிறந்தனர்.

1909ஆம் ஆண்டு ஆங்கிலிக்கம் திருச்சபையில் ஆயராக அருள்பொழிவு பெற்றார். ஆந்திராவில்உள்ள தோர்ணக்கல்லில் பணியாற்றினார்.

1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் நாள் தோர்ணக்கல்லில் தொடங்கப்பட்ட பேராயத்தின் முதல் பேராயராக கல்கத்தாவில்உள்ள தூய பவுலோ பேராலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

தொடக்கத்தில்மிகச் சிறியதாக இருந்த தோர்ணக்கல் பேராயத்தின் மிகப் பெரியதாக விரிவாக்கம் செய்தார்.  CMS, SPG ஆகிய கழகங்களின் சபைகளையும் தோர்ணக்கல்பேராயத்துடன் இணைந்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய - எண்ணிக்கையில் - பேராயராக விளங்கியது.

தோர்ணக்கல்லில் இந்திய இஸ்லாமியக் கலை நுணுக்கத்துடன் கூடிய மிகப்பெரிய பேராலயத்தைக் கட்டினார். 1936 ஆம் ஆண்டு அப்பேராலயம் மங்கலப்படைப்புச் செய்யப்பட்டது.அசரியா அப்பேராயத்தின் ஒரு ஓரத்தில்ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஆனால் முழு நேரமும் பேராயம் முழுவதும் மாட்டு வண்டி அல்லது சைக்கிளில் சுற்றித் திரிந்து நற்செய்தியை அறிவித்தார். அவருடைய மனைவியும் உடன் ஊழியர் ஒருவரும் உடன் செல்வர்.

நான்கு D க்களை அகற்ற முயன்றார்.

Dirty
Disease
Debt
Drink

ஆகியவற்றை அகற்ற முயன்று வெற்றியும் கண்டார்.
அடிமட்டத்தில் மக்களின்மனமாற்றத்தில் வெற்றி கண்ட ஊழியராக விழங்கினார். அவருடைய கூட்டங்களில் சுமார் 2,00,000 தாழ்த்தப்பட்ட , ஆதிவாசி மக்கள் பங்குபெறுவர். பெண்கள் பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.

1924 ஆம் ஆண்டு  8 ஆங்கிலேய ஆயர்கள், 53 இந்திய ஆயர்கள் அப்பேராயத்தில் இருந்தனர்.
1935 ஆம் ஆண்டு 250 இந்திய ஆயர்கள்,2000 சிற்றூர் ஆசிரியர்கள், மருத்துவமனைகள், கூட்டுறவுக் கடைகள், அச்சகம் ஆகியவை இருந்தன.

காந்திஜி யுடன் நட்பாக இருந்தார். ஆனாலும் இந்து சமயத்தின் சாதியத்தை வெகுவாக எதிர்த்தார். அவருடைய திருப்பணிக்கு அனைத்தும் ஆந்திராவில்உள்ள மாலாக்கள், மடிகர்களுக்காகவே  ( Malas and Madigars ) இருந்தது.

கிறிஸ்தவத் திருப்பணி சிறந்து விளங்க வேண்டுமென்றால் திருச்சபைகள் இணைந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றார். இந்திய தேசியக் கிறிஸ்தவம் பெருமன்றத்தின் ( National Christian Council of India) தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றி இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளின் திருச்சபை ஒருமைப்பாட்டிற்காக உழைத்தார்.

1920 ஆம் ஆண்டு கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவப்பட்டம் அளித்தது.
1912 ஆம் ஆண்டுமுதல் அவரது மரணம் வரை இந்தியாவின் முதல் பேராயராகப் பணியாற்றினார்.

ஆந்திராவின் ஓரங்கட்டப்பட்ட ஏழைமக்களுக்கும் ஆங்கில அரசின் உயர்அதிகாரங்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.

1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோர்ணக்கல்லில் மரித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவரது நீண்டநாள் கனவு நனவாகியது. 27-9-1947 அன்று தென்னிந்தியத் திருச்சபை உருவாகியது.

தோர்ணக்கல்லில் அவரது பெயரில் ஒரு கல்லூரியில் பெண்கள்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

அவரது சொந்த ஊர் வெள்ளாளன்விளையிலும் ஒரு மேல் நிலைப்பள்ளி உள்ளது.

அவருடைய பிறந்தநாள் ஆகஸ்டு 17 ஆம் தேதி வருகிறது.
நாம் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment