Friday 19 August 2022

CMS Evangelical Church History


1870 க்குப் பிறகே ஆக்ஸ்போர்டு எழுப்புதல் இயக்கம் இங்கிலாந்தில் வலுப்பெறுகிறது அந்த காலகட்டத்திற்கு பின்பு வந்த எஸ் பி ஜி மிஷனரிகள் சடங்கு ஆச்சாரங்களை அதிகமாக திருச்சபைக்குள் புகுத்தினர் இங்கிலாந்திலும் ஆங்கிலிக்கன் திருச்சபை யில் இவை இடம் பெறலாயிற்று சடங்கு ஆசாரங்களில் ஆர்வம் மிக்கவர்கள் ஆங்கிலிக்க சபைக்குள் அதிகமாயினர் இவர்களால் ஆங்கிலிக்கன் திருச்சபை மூலம் நற்செய்தி பணியை செய்து வந்த மிஷனரி இயக்கங்களிலும் சடங்கு ஆச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன தொடக்ககால எஸ்பிஜி மிஷனரிகள் தங்கள் சபைகளில் சடங்கு ஆசாரங்களை அதிக அளவில் நடைமுறைப்படுத்தவில்லை 
நாசரேத் மிஷினரி Rev. மர்காஷிஸ் ஐயர் அவர்கள் காலமுதல் சடங்காச்சாரங்கள் எஸ்பிஜி சபைக்குள் அதிகமாக புகுத்தப்பட்டது குறிப்பாக நாசரேத்தில் அதன் சுற்று கிராமங்களில் சாயர்புரத்தில் அதன் சுற்று கிராமங்களில் சடங்கு ஆச்சாரங்கள் அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டன இதற்கு அவ்விரு இடங்களிலும் இருந்த குருமார் காரணம்.

 அக்காலத்தில் எஸ் பி ஜி க்கான பேராயராக நியமிக்கப்பட்ட மகாகனம் கால்டுவெல் அவர்கள் இக்காரியத்தில் உடன்படவில்லை அக்கால எம் டி சி கமிட்டி மகாகனம் கால்டுவெல் அத்தியட்சர் அவர்களை சடங்காச்சாரங்களை வலுவாக நடைமுறையாக கட்டாயப்படுத்திய போதும் பேராயர் கால்டுவெல் இக்காரியத்தில் உடன்பட மறுத்தார் ஆதலால் கால்டுவெல்லை காட்டிலும் மர்காஷிஸ் க்கு எம் டி சி கமிட்டி முக்கியத்துவம் தந்தது இதனால் கால்டுவெல் தமது இறுதிக்காலத்தில் மிகுந்த மனவேதனை அடை ந்ததாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

CMS சுத்தாங் க சபை வரலாறு நூல்
CMS மிஷினரி இயக்கத்தின் அடிப்படை கோட்பாடு சடங்கு ஆச்சாரம் இல்லாத சுத்தாங்க சுவிசேஷம் ஆனால் எஸ்பிஜி மற்றும் சி எம் எஸ்
இணைப்பால் இந்த அடிப்படைக் கோட்பாடு மாற்றம் பெற்றுவிடும் என்ற கவலை கொண்ட சி எம் எஸ் சபை பெரியோர்கள் சபை குருவானவர்கள் இந்த ஐக்கிய திட்டத்தை ஏற்கவில்லை அந்நேரத்தில் சிஎம்எஸ் கோட்பாடுகள் மாற்றம் செய்யப் படாது என்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது ஆனால் அவை உடனடியாகவே மீறப்பட்டது 
ஆதலால் தவறுகள் இருபுறத்திலும் உள்ளன

 தோரணக்கல் திருமண்டல பேராயர் நியமனம் குறித்து பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட இரு சீனியர் குருவானவர்கள் சுத்தாங்கப் பிரிவினைக்கு காரணம் என பதிவிடுவது சரியான முறை அன்று.

IMS மிஷனரி இயக்கம் உருவாகவும் அதன் முதல் மிஷனரியாக சென்றவரும் ஆன Rev. சாமுவேல் பாக்கியநாதன் ஐயர் அவர்கள் 12 மொழிகளை நன்கு அறிந்தவர் 
பேராயர் அசரியா Dornakkal திருமண்டலத்திற்குள் வரும் முன்பாகவே ஏராளமான சபைகளை கட்டி எழுப்பியவர் 

அவர் குருவானவராக தலைமை மிஷனரியாக அங்கு பணி செய்தபோது குருத்துவ பட்டம் பெறாத சாதாரண மிஷனரியாக தோர்நக்கல் சென்றவரே பேராயர் அசரியா அவர்கள் ஆனால் இக்காரியத்தில் வரலாறு எவ்வாறு மிஷநரி ரேனியஸ் க்கு இருட்டடிப்பு செய்யப்பட்ட தோ அதேபோன்று சாமுவேல் பாக்கியநாதன் அவர்களுக்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டது 
தன்கீழ் சாதாரண மிஷனரியாக வந்த ஒருவர் ஓரிரு ஆண்டுகளில் பேராயராக சுப்பீரியர் ஆக உயர்த்தப்படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் தனது 65 வயது வரை கர்த்தருடைய பணியை அங்கு செய்து ஓய்வு பெற்று பாளையங்கோட்டைக்கு வந்தவரே Rev. சாமுவேல் பாக்கியநாதன்

அக்காலத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட போட்டோ சிறந்த சான்றாக உள்ளது

இந்த போட்டோவில் சாமுவேல் பாக்கியநாதன் அவர்களும் சாலமோன் பாக்கியநாதன் அவர்களும் உட்கார்ந்த நிலையில் இருப்பதும் பிற்காலம் பேராயர் ஆக 
வயது
பணிமூப்பு 
குருப்பட் டம் பெற்ற ஆண்டு
எதையும் கணக்கில் எடுக்காமல் ஐரோப்பியர்கள் உடன் கொண்டிருந்த பழக்கத்தின் காரணமாக பேராயராக சாதாரண மி ஷனரி நிலையிலிருந்து உயர்த்தப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் சாமுவேல் பாக்கியநாதன் அமைதி காத்தார் பணிக்காலம் முடிந்த பின்பே வந்து சேர்ந்தார்.
சுத்தாங்க பிரிவினையில் அவருடைய பங்களிப்பு எதுவும் கிடையாது கீழ்க்கண்ட சுத்தாங்க வரலாற்று நூல் மூலம் நாம் அதை அறிந்து கொள்ள முடியும் .

பேராயராக நியமிக்கப்பட்ட மகாகனம் அசரியா அவர்களால் குறைவாக நடத்தப்பட்ட பாக்கியநாதன் சகோதரர்களில் சாலமோன் பாக்கியநாதன் அங்கிருந்து நெல்லை திருமண்டலத்துக்கு வந்து சேர்ந்தார்கள் 
1919இல் எல்லா ஆலயங்களிலும் ஆல்டர் மேஜை யில் சிலுவை வைக்க வேண்டும் என்ற திட்டத்தை எம்டிசி கமிட்டி திருநெல்வேலி திருமண்டலத்தில் வலியுறுத்தியபோது 1919இல் திருமண்டல கூட்டத்தில் அதை மறுத்து சாலமோன் பாக்கியநாதன் பேசினார்கள் வெளிநடப்பு செய்தார்கள் இந்த காரியங்கள் நெல்லை சபை வரலாற்று நூல்களில் காணப்படவில்லை கீழ்கண்ட நூலில் ஆதாரத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது சாலமோன் பாக்கியநாதன் திருமண்டலத்தை விட்டு வெளியேற்றப் படுகிறார்கள் இக்காலகட்டத்தில் Rev E.S. கார் ஐயரவர்கள் லண்டனிலிருந்து இந்த ஐக்கிய திட்டத்தால் c.m.s. பாரம்பரியம் பாதிக்கப்படும் நாசரேத்தில் உள்ள 
எஸ் பி ஜி சார்பு செமினரி இல் படித்துவரும் குருவானவர்கள் சி எம் எஸ் எல்லைக்குள் எஸ் பி ஜி வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் நடைமுறைப்படுத்துவர் என கண்டிப்புடன் எழுதிய கடிதமும் கீழ்க்கண்ட நூலில் உள்ளது சுத்தாங்க பிரிவினை குறித்து நாம் அறிந்திராத பல காரியங்கள் இந்த நூலில் உள்ளது இந்த நூலில் முழு விபரங்கள் கொடுக்கப்படா விட்டாலும் ஓரளவு விபரங்கள் உள்ளன இந்த நூலை படித்து அறிவது பிரிவினை குறித்து அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் இந்நூல் மூலம் சாமுவேல் பாக்கியநாதன் ஐயர் அப் பிரிவினையில் சம்பந்தப்படாதவர் என்பதை அறியலாம் அவரது தம்பி சாலமோன் பாக்கியநாதன் சம்பந்தப்பட்டுள்ளது குறித்து அறியமுடியும் ஆனாலும் டயோசீசன் நிர்வாகம் சாமுவேல் பாக்கியநாதன் க்கு பென்சனை ரத்து செய்த சோக சம்பவமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
( J.ஜான் ஞானராஜ், கல்லிடைக்குறிச்சி)

No comments:

Post a Comment