Sunday 13 January 2019

துதித்துப்பாடிட பாத்திரமே… பாடல் பிறந்த கதை

துதித்துப்பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதேது
திகளின் மத்தியில் வாசம் செய்யும்தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

………….

இந்தப் பிரபல பாடலை எழுதி, ராகமும் அமைத்து, பல இடங்களில் ஆண்டவரை உற்சாகமாயத் துதித்துப் பாடிவரும் சகோதரி.சாராள் நவரோஜியை, கிறிஸ்தவ சமுதாயமனைத்தும் நன்கு அறியும்.

கடந்த 40 ஆண்டுகளாக, இசைவழி இறைப்பணி செய்துவரும் இச்சகோதரியின் மூலம் கிறிஸ்தவ உலகிற்கு தேவன் அருளிய பாடல்களின் எண்ணிக்கை 361 ஆகும்.

சகோதரி சாராள் நவரோஜி 60 ஆண்டுகளுக்கு முன் ஊழிய வாஞ்சை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தார். இவரது தந்தை திரு சாலமோன் ஆசீர்வாதம் ஒரு கர்நாடக இசை மேதையாவார். அவரது முன்னோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். மதுரை அழகர் கோவிலில் பாடல்களைப் பாடிவந்தவர்கள். திரு. சாலமோன், சாது சுந்தர்சிங்கின் மூலம் நற்செய்தியை அறிந்து, ஆண்டவரை
ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், கர்நாடக இசையில் ஆண்டவரைத் துதித்துப் பல பாடல்களை இயற்றிப் பாடினார். லுத்தரன் திருச்சபை
நாட்டையர்களுக்குப் பாடக் கற்றுக் கொடுத்தார். சகோதரியின் தாயார் திருமதி. சவுந்தரம் அம்மையார்
1924-ம் ஆண்டு முதல், வெளிநாட்டு
மிஷனரிச்சகோதரிகளுடன் சேர்ந்து, தென்னகத்தில் சிறுவர் ஊழியத்தை ஆரம்பித்து நடத்திய முன்னோடிச் சிறுவர் மிஷனரியாவார்.

இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சகோதரி சாராள், லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர். பின்னர், தனது
14-வது வயதில், பிரதரன் அசெம்பிளி நடத்திய நற்செய்திக் கூட்டத்தி;ல் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

தனது 18-வது வயதிலே, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றார். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி,
1956-ஆம் ஆண்டு முதல், பாடல்களை இயற்றி, ராகமமைத்துப் பாடி, இசைத் தொண்டாற்றி வருகிறார்.

சென்னை மின்சார வாரியத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த நாட்களில், சகோதரி சாராள், ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். எனவே, 1959-ம் ஆண்டு, தனது இருபதாவது வயதில், முழுநேரப் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார்.

1959 முதல் 1962 வரை இலங்கையில் வேதாகமத்தில் பயிற்சி பெற்று, ஊழியம் செய்தார். பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சபைகளைச் சந்தித்து, உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தி, ஆவியில் அனல் மூட்டினார்.

சென்னையில், சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கிய சபையை ஸ்தாபித்து, தேவ பணியை அருகிலும், தூரத்திலும் உள்ள கிராமங்களில் தொடர்ந்து உத்தமமாய்ச் செய்து வருகிறார்.

மாம்பழச்சங்கப் பண்டிகை

*"கூட்டம்" என அன்புடன் அழைக்கப்படும் ஸ்தோத்திரப் பண்டிகை*

ஸ்தோத்திரப் பண்டிகையின் முன்னோடி பண்டிகையான மாம்பழச்சங்கப் பண்டிகை கனம்.ரேனியஸ் ஐயரவர்களுக்குப் பின் சில ஆண்டுகளாக நடைபெறாமல் நின்றுபோயிருந்தது. 1849 ஆம் ஆண்டு கனம்.ஜார்ஜ் பெற்றிட் ஐயரவர்களால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இப்பண்டிகையில் படைக்கப்படும் காணிக்கை விதவைப் பெண்கள் பராமரிக்கப்பட பயன்படுத்தப்பட்டது. பழக்கதோஷத்தால் குரங்கணி ஆனித்திருவிழாவிற்கு சென்று வந்த கிறிஸ்தவர்கள் மாம்பழச்சங்கப் பண்டிகைக்குச் செல்ல ஆரம்பித்தனர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் நோக்கம் நிறைவேறியது.
ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் தென்மாவட்டக் கிராமங்களில் கொடைவிழாக்களும் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு
காரையாரில் ஆடி அமாவாசை என தொடர் விழாக்களில் புறமதத்தினர் ஒன்றுகூடி விழா எடுப்பதைக் கண்டு புதிய கிறிஸ்தவர்கள் பின்வாங்காதபடி தடுக்கவும் பல கிராமக் கிறிஸ்தவர்களை சர்க்கிள் தலைமையிடங்களில் ஒன்றிணைத்து பண்டிகை கொண்டாடவும் CMS மிஷனரிகள் முயற்சி எடுத்தனர்.
முதன்முதலாக தபசஉற்சவம் எனும் ஸ்தோத்திரப் பண்டிகை வடநெல்லை சர்க்கிள் தலைமையிடமான சாட்சியாபுரத்தில் (சிவகாசி) 1891 ல் CMS மிஷனரி கனம்தாமஸ்
உவாக்கர் ஐயரவர்களால் தொடங்கப்பட்டது. இது பின்னர் கூட்டம் என்றழைக்கப்படலாயிற்று.
கீழ்க்கண்ட சர்க்கிள் தலைமையிடங்களில் கீழ்க்கண்ட ஆண்டுகளில் ஸ்தோத்திரப் பண்டிகை தொடங்கப்பட்டது
*1.சாட்சியாபுரம் - 1891*
*2.நல்லூர் - 1892*
*3.மெஞ்ஞானபுரம் - 1893*
*4.டோனாவூர் - 1894*
*5.சுவிசேஷபுரம் - 1894*
*6.பாளையங்கோட்டை - 1895*
*7.சுரண்டை - 1896*
*8.பண்ணைவிளை - 1896*
*9.இடையன்குளம் - 1902*
நல்லூர் சர்க்கிளில் இருந்து அம்பாசமுத்திரம் சர்க்கிள் பிரிந்தவுடன் அம்பாசமுத்திரம் சர்க்கிளுக்கான ஸ்தோத்திரப் பண்டிகை *கடையத்தில்**தொடங்கப்பட்டது. தென்காசி சாந்தபுரம்
புளியங்குடி
பாவூர்சத்திரம் ஆகிய நான்கு சேகரங்கள் ஓருங்கிணைந்து 1944 ல்  *குற்றாலத்தில்* ஸ்தோத்திரப்பண்டிகையைத் தொடங்கினர். அப்பண்டிகை 75 ஆவது ஸ்தோத்திரப்பண்டிகையாக கடந்த வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் நடைபெற்றது.

✝ சாம் ஜெபத்துரை ✝

தென் தமிழ்நாட்டில் இடையன்குடி என்ற கிராமத்தில் ஜோசப் மற்றும் சவுந்திர மணி 👨‍🏫ஆசிரியப் பெரு மக்களுக்கு மகனாக பிறந்தார்  சாம் ஜெபத்துரை. இடையன்குடியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஆரம்பித்த அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்ட் ஜான்ஸ் காலேஜ் மற்றும் சென்ட்  சேவியர் காலேஜ் பாளையங்கோட்டையில் பயின்றார். பின்னர் எம்.ஏ. அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலை பட்டம் முடித்தார்👨🏻‍🎓 .

அவர் 8 வயதில்🙆‍♂ இருந்தபோது பயங்கரமான போலியோவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையின் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் சாதாரண ஆரோக்கியத்திற்கு திரும்பினார் ஆனால் இன்று வரை அவரது🚶🏼‍♂ கால்களில் ஒரு கால் மற்றதை விட அளவில் குறைவாக உள்ளது. இதனால் ஆரம்ப காலங்களில் பல அவமானங்களையும் நிந்தனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது . "என் கிருபை உமக்கு போதுமானது" ஆம் அவருடைய பலவீனம் அவரது பலவீனத்தில் பரிபூரணமானது. அவரது விசுவாசத்திற்கு உண்மையாக  அவரை உயர்வாக வைத்தார் இறைவன். அவரை  சுவிசேஷத்தை பரப்புவதில் சிறந்த கிறிஸ்தவ கலை வல்லுனராக (கிறிஸ்தவ 🖋 எழுத்தானியாக) உயர்த்தினார்.

சுமார் 16 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் வருமானவரித் துறையில் வேலை செய்தார் . அவர் 1975 ஆம் ஆண்டு 👨‍❤‍👨திருமணம் செய்தார். அவரது மனைவி வினோவும் வருவாய்த்துறையில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு👬👭 இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த பையன் ஜோசப் தன்னுடைய அப்பாவின் இறை சேவையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு சாம் ஜெபதுறை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராக மாறினார் . அவர் முழு நேர ஊழியத்திற்கான அழைப்புக்கு முன்பே தனது ஓய்வு நேரத்தில் இறைவனைச் சேவித்து வந்தார், 🗣தெருக்களில் பிரசங்கிப்பதன் மூலம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளைப் பார்வையிட்டு அவர்களுக்காக 🙏ஜெபம் செய்து வந்தார்.

ஒரு நாள் மதியம், அலுவலகம் செல்லும் வழியில் இயேசு தம் முன்னால்😭 கண்ணீரோடு நிற்கும் காட்சியை கண்டார்."கடவுளே, நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், "என் மகனே, நான் பல ஆத்துமாக்கள் அறியாமையால் இருப்பதைப் பார்த்தேன் . அவர்களை ஆவிக்குரிய மன்னாவாக்க நீ செல்வாயா?" என்றார். சாம் ஜெபதுரை 💥கடவுளுடைய அழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.  முழு நேர ஊழியத்திற்கும் தனது பணியை ராஜினாமா செய்தார்.

1977 ஆம் ஆண்டு "அவருடைய பாஸ்டர் மனைவியின்" 📒புத்தகம் வாசித்த அவர் குறிப்பாக தமிழ் மக்களும் இத்தகைய புத்தகங்களை வாசித்திருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று அவர் கூறினார். அப்பொழுது கர்த்தர்: நீ ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்டார். "ஆண்டவரே, நான் லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை பரப்ப விரும்புகிறேன் என்றார்.  நம்முடைய ஆண்டவர் மோசேயிடம் "உன்✋ கையில் என்ன இருக்கிறது" என்று கேட்டது போல் கேட்டார். (Ex 4: 2)  அதற்கு அவர்✒ ஒரு பேனா என்றார். அப்பொழுது கர்த்தர், "நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் கற்றுக் கொடுப்பேன், உன் கையில் உள்ள பேனாவைப் பயன்படுத்தி உன்னை நான் மகிமைப்படுத்துவேன்" என்றார். இதுதான் நமது பேனா🖊 மனிதனின் வரலாறு.

தமிழ் கிறிஸ்துவ இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பு காரணமாக அவருக்கு அமெரிக்காவில் மூன்று பல்கலைக்கழகங்களில்👨🏻‍🎓 டாக்டரேட் வழங்கப்பட்டது 1. கலிபோர்னியா பல்கலைக்கழகம் செமினரி 2. சர்ச் மேலாண்மை சர்வதேச நிறுவனம், அமெரிக்கா & 3. Cornerstone பல்கலைக்கழகம், டெக்சாஸ், அமெரிக்கா.

நம்முடைய ஆண்டவர் தம் அழைப்பில் உண்மையுள்ளவர் அவருடைய மகிமைக்காக வலிமைமிக்க ஒரு சாதனமாக திகழ செய்தார். இதுவரை 750📖 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நம் ஆண்டவரின் கையிலிருக்கிற பொற்🖊 பேனா.

எல்லா புத்தகங்களும் நிறைய ஜெபங்களுக்கு பிறகு எழுதியிருக்கின்றார், அவற்றில் உள்ள அனைத்து வார்த்தைகளும் 🔥பரிசுத்த ஆவியானவர் மூலம் தூண்டப்படுகின்றன. அவர் புத்தகங்கள் எழுதுவதற்கான திறமைகளுடன் மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த பிரசங்கியாகவும் இருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் வல்லமை அவருடைய பிரசங்கங்களிலிருந்து கூட்டங்களில் கலந்துகொள்பவர்களிடம் மிகுந்த ஆசீர்வாதம் அளிக்கிறது. சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி பல✈ நாடுகளுக்கு இறைவன் அவரை அழைத்து சென்றிருக்கிறார். இதுவரை அவர் உலகம் முழுவதும் 60 நாடுகளில் சுவிசேஷம் அறிவித்து இருக்கிரார். இறைவன் இன்று அவரை விண்ணுலகம் அழைத்து சென்றார்.

சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ் (1790-1838)

சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸ் (1790-1838)
=======================================

🔥 பிறந்த நாடு- இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா

🔥 தாய் மொழி- ஜெர்மனி

🔥 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்

🔥 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை

🔥 நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371

🔥 நிறுவிய பள்ளிகள் 107

🔥 திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்லறை பேசும் சாட்சியாக முருகன் குறிச்சியில் உள்ளது

🔥 பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை உருவாக்க ஆசிரிய பயிற்சி பள்ளிகள், பாடத்திட்டங்களுக்கு தேவையான புத்தங்களை உருவாக்குதல், பள்ளி நடத்த திருச்சபைகள் மூலம் நிதி திரட்டுதல் என கல்வியை வெகுசன இயக்கமாக, தமிழ் வழிக் கல்வியாக முன்னெடுத்தவர்

🔥 திண்ணை பள்ளிகளில் மேட்டுக் குடிகளிடம் முடங்கிக் கிடந்த கல்வி என்னும் அறிவாயுதத்தை சாமானியர்களுக்கும் சாத்தியமாக்கியவர்

🔥 மெய்ஞ்ஞானபுரம், டோனாவூர், நல்லூர், சுரண்டை, சாந்தபுரம், பாவநாசபுரம், நேசபுரம், நலலம்மாள்புரம், இரட்சணியபுரம், சௌக்கியபுரம், தர்மநகரம், நாயினூர், விசுவாசபுரம், சந்தோஷபுரம், அனுக்கிரகபுரம், சீயோன் மலை, இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என ஏராளாமான ஊர்களை உருவாக்கியவர்

🔥 முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தவர். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர் . இயல்பாகவே இனிமையாகப் பேசக்கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவர்

🔥 துண்டு பிரசுர சங்கத்தை சென்னையிலும், நெல்லையிலும் நிறுவியவர் (Madras Tract and Religious Book Society)

🔥 ஒருநாள் வருமான காணிக்கை படைத்தல், கைப்பிடி அரிசி காணிக்கை, ஆலய பரிபாலன நிதி திட்டம் (Local church Fund)*
*போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்

🔥 “தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தவர்

🔥 விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியார்களின் விதவை மனைவிகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்து வர ஏற்பாடு செய்தவர்.

🔥 கிறிஸ்தவர்களாக மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாகத் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடைவிழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காகப் பாளையங்கோட்டையில், 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப்பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

🔥 சென்னை வேதாகம சங்கம் 1817, நவம்பர் 5 இல் இவரது பெரு முயற்சியால் துவங்கப்பட்டது

🔥 தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது திருப்புதலை செய்தவர் . புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் தானியேல் வரை மொழி பெயர்த்தார். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே

🔥 தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் (பூமி சாஸ்திரம்)

🔥 சாதிக்கு எதிராக முதல் கல்லை எறிந்து சமூக நீதி யுத்தத்தை துவங்கி வைத்தவர்

🔥 பெண்களுக்கு பள்ளிக்கூட கதவுகள் நெல்லையில் முதன்முதலில் திறக்கப்பட காரணமாக இருந்த மகான்

🔥 இவர் துவங்கிய பெண்களுக்கான விடுதிகளுடன் கூடிய சிறப்புப் பள்ளி இந்தியாவிலேயே துவங்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது பள்ளியாகும். அது இன்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது

🔥 வெங்கு முதலியார் உள்ளிட்ட ஏராளமான மாற்று சமய நல் உள்ளம் படைத்தவர்களோடும் நட்பு பாராட்டியவர்

🔥 காலரா, பெருவெள்ளம் என இயற்கை பேரிடர்கள் நேரிட்ட போதெல்லாம் தனக்கு தெரிந்த முதலுதவிகள் மூலம் ஓடோடி உதவிய மனிதாபிமானி

🔥 தமிழ் இலக்கணம் (A Grammar of the Tamil Language: With Appendix) உள்ளிட்ட நல்ல பல நூல்களை தந்தவர்

🔥 திரள் கூட்ட சுவிசேஷ இயக்கம் (Mass Movement Evangelism) இவரிலிருந்தே இந்தியாவில் துவங்குகிறது.

🔥 நெல்லைக்கு அடையாளமாக விளங்கும் தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) இவர் கட்டியது

🔥 'அனைத்து மக்கள் கல்வி’, ‘சமூக நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் என தெளிந்த கோட்பாடுகளோடு தென்பாண்டிச் சீமையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர்.

🔥 “ 1820 முதல் 1835 வரையிலான ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்”

🔥 “பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.

🔥 தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர் இவர், தனது சொந்த ஊரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து , மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் வரை இவர் எழுதிய நாட்குறிப்புகளின் பகுதிகள், கடிதங்கள் , அறிக்கைகள் அடிப்படையில் Memoir of the Rev. C.T.E. Rhenius, எனும் புத்தகம் அவரது மகனால் 1841 இல் வெளியானது.

🔥 இந்த நூல் இப்பொழுது ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள் எனும் பெயரில் மூன்று தொகுதிகளாக தமிழில் வெளியாகிறது. ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துவிட்ட நிலையில் அவரின் இந்த பிறந்த நாளான 2018 நவம்பர் 5 இல் மூன்றாவது தொகுதி வெளியிடும் நிலையில் உள்ளது.

ரேனியஸ் ஐயரால் தோற்றுவிக்கப்பட்ட 371 திருச்சபைகள்

05.11.2018 ரேனியஸ் ஐயரவர்களின் பிறந்த தினம்.அவரால் தோற்றுவிக்கப்பட்ட 371 திருச்சபைகள்

1822
"பாளையங்கோட்டை - முருகன்குறிச்சி
திருப்புளியங்குடி

1823
அருளூர்
அமத்தவொண்ணாக்குடி
கான்சாபுரம்
கீழப்பாட்டம்
சாத்தன்குளம்
செக்கடிவிளை
தச்சமொழி
ஸ்ரீவைகுண்டம்

1824
இலங்கநாதபுரம்
கலுங்குவிளை
கரட்டுக்காட்டுவிளை
கருங்கடல்
குப்பாபுரம்
குறிப்பங்குளம்
கோவிந்தபேரி
சிதம்பரபுரம்(சாத்)
சோலைக்குடியிருப்பு
நடுவக்குறிச்சி(சாத்)
நளன்குடி
பண்டாரபுரம்
புதுப்பச்சேரி(சாத்)
நெடுவிளை
வைத்திலிங்கபுரம்
வைரவம்

1825
அழகப்பபுரம்(சுவி)
ஆரைக்குளம்(செவ்)
ஆனைக்குளம்
இடைச்சிவிளை
ஓடைக்கரை
கணபதிநாடானூர்
கரிசல்
கள்ளிகுளம்(டோனா)
கிருபாபுரம்
குற்றாலம்
கொக்கிரகுளம்
கொம்மடிக்கொட்டை
சங்கரன்குடியிருப்பு
செங்குளம்
செபஞானபுரம்(சாத்)
செவ்வல்
தருவைக்குளம்
திசையன்விளை
திருநெல்வேலி
துலுக்கப்பட்டி(டோனா)
துவரைக்குளம்(டோனா)
நரிக்காரன்குடியிருப்பு
நல்லூர்(சுவி)
நெடுங்குளம்
நெடுவிளை(மெஞ்)
படுக்கப்பத்து
பண்டாரக்குளம்
பாம்பன்குளம்
மருதூர்க்கரை
முறப்பநாடு
வடக்கன்குளம்
வீரவநல்லூர்(மெஞ்)

1826
உவரி
கடாட்சபுரம்
கீழக்கள்ளிகுளம்
குறிப்பங்குளம்(நல்)
கோவைகுளம்
சமாரியா 
செல்வமருதூர்
நட்டாத்தி
நன்னிகுளம்
நாகன்பச்சேரி
புதுக்குளம்(சாத்)
புதூர்(நாச)
புலியூர்குறிச்சி
பெத்லேகேம் 
முத்துக்கிருஷ்ணாபுரம்(கடாட்)
வீரவநல்லூர்(செவ்)
ரெங்கபுரம்
சண்முகபுரம்(கடாட்)

1827
ஆசீர்வாதபுரம் (ஆசீர்)
இடையன்குளம்
ஏலத்தூர்
கந்தன்குடியிருப்பு
கம்பம்
குளத்துக்குடி(சுவி)
கொங்கராயர்குறிச்சி
சக்கம்மாள்புரம்(பண்)
சுப்பிரமணியபுரம்(சுவி)
செட்டிகுளம்(சாத்)
செம்மறிக்குளம்
டோனாவூர்
தட்டான்குளம்
தாதன்குளம்
தெற்கு மைலோடை
தோப்பூர்(டோனா)
நல்லமரம்
நாயினூர் 
நெரிஞ்சிவிளை
படுகலிங்கபுரம்
புதூர்(சுவி)
மாதாங்கோயில்பட்டி(சாஷி)
மாவடி(டோனா)
ராமன்குடியிருப்பு 
ரெங்கப்பபுரம்
ரெட்டியார்புரம்
வன்னியம்பட்டி(சாஷி)
ஜீயர்குளம்

1828
அழகனேரி(நல்)
ஆணையப்பபுரம்
இரணியன்குடியிருப்பு
ஓட்டப்பிடாரம்
கடையம்
கலந்தபனை
கல்லிடைக்குறிச்சி
கல்யாணிபுரம்
கருத்தப்பிள்ளையூர்
காவல்கிணறு
கோடங்குளம்
கோம்பைக்குளம்
சீவலசமுத்திரம்
செட்டிவிளை
செய்த்தலை
தச்சநல்லூர்
தருவை 
தலைவன்கோட்டை
திருநெல்வேலி
பொட்டல்குளம்
பொட்டல்புதூர்- பள்ளிவாசல்
முனைஞ்சிப்பட்டி
மூத்தநயினார்குளம்
மேட்டுக்குடியிருப்பு
மேட்டூர்

1829
அகிலாண்டபுரம்
ஆனைகுடி
ஆழ்வாநேரி
இட்டமொழி
இரப்புவாரி
இலஞ்சி
இலந்தைக்குளம்
உக்கிரமன்கோட்டை
கண்ணநல்லூர்
கல்லத்திக்கிணறு
காக்கையனூர்
காரன்காடு
காஷ்மேஜர்புரம்
சமாதானபுரம்(பண்)
சுண்டங்கோட்டை
சுண்டவிளை
சீவலப்பேரி
தட்டான்மடம்
திருக்குறுங்குடி
திருமலாபுரம்
தீத்தரம்பட்டி
தோற்குளம்
நல்லம்மாள்புரம்
பண்ணைவிளை
பன்றிகுளம்
பருத்திப்பாடு
புதியம்புத்தூர் (புதி)
புதுக்கோட்டை(பன்)
புதூர்(ஆசீர்)
புளியங்குளம்(ஆசீர்)
பெட்டைக்குளம்
பெருமாள்குளம்
பொடியனூர்
மருதன்வாழ்வு
முக்கூடல்
முப்பிலிப்பட்டி
மேலப்பாளையம்
வல்லம்
வானரமுட்டி
ஜம்புலிங்கபுரம்

1830
அனுக்கிரஹபுரம்
ஆலங்குளம்(நல்)
காசியாபுரம்
கொண்டவல்லிநாடானூர்
சிவந்திப்பட்டி
தாமரைச்சேரி
தோணுகால்(சாஷி)
நாசரேத்(பேர்ப்)
நான்குநேரி-பெரும்பத்து
பாவனாசபுரம்
புதுக்குறிச்சி(ஆழ்)
புளியங்குடி
பெருங்குளம்
பொன்னகரம்
மெஞ்ஞானபுரம்
மேலச் சிதம்பராபுரம்
லட்சுமிபுரம்(மெஞ்)
வெங்கட்ராயர்புரம்
ஜீவனூர்

1831
அச்சம்பாடு
உப்பாறு
உடைப்புக்குடியிருப்பு
காலங்கரை
காளிச்செட்டிவிளை(பண்)
குமிழம்பாடு
குருவன்கோட்டை
சந்தோஷபுரம்(ஆசீர்)
செத்தைவிளை
பண்டாரவிளை
பனைக்குளம்(ஆசீர்)
பிரகாசபுரம்
புதுப்பட்டி(நல்)
மன்னாரைய்யன்தட்டு
வெளிச்சிபுரம்
வன்னியன்குடியிருப்பு(பண்)
வேப்பங்குளம்(பன்)
சண்முகபுரம்(டோனா)

1832
அம்பாசமுத்திரம்
பரங்குன்றாபுரம்
இருளப்பபுரம்(சாயர்)
புதுப்பட்டி(ஸ்ரீவிலி)
கட்டாரங்குளம்
புளியங்காடு(சாயர்) ‡
கம்மாப்பட்டி
பேராம்பண்ணை
காட்டுச்சக்கம்மாள்புரம்(புது)
கிருஷ்ணராஜபாளையம்(சாஷி)
சங்கிலிப்பட்டி(சாஷி)
சத்திரப்பட்டி(சாஷி)
திருமலையப்பபுரம்(நல்)
துலுக்கங்குளம்(சாஷி)
நடுவக்குறிச்சி(சாயர்)
நல்லூர் (நல்)
நாச்சியாபுரம்(பன்)
நீதிபுரம்
வெட்டனைஞ்சானூர்
பேரின்பபுரம்(பன்)
மூலக்கரைப்பட்டி
ராஜபாளையம்
ரெங்கசமுத்திரம்
ரைட்டன்பட்டி(ஸ்ரீவிலி)
லட்சுமிபுரம் (சுர)
வடலிவிளை(பேர்ப்)
வலசைக்காடு
வன்னியன்பட்டி(சாஷி)
விஜயநாராயணம்
வில்லிசேரி
ஸ்ரீவில்லிப்புத்தூர்

1833
அச்சம்புதூர்
அச்சன்குன்றம்
அடைக்கலபுரம்(சாத்)
அன்பினகரம்(கடாக்ஷ)
அய்யாபுரம்
ஆரோக்கியபுரம்
ஆலடித்தட்டு
ஆவடிப்பட்டி
இடையர்காடு(சாயர்)
எழுவிளை
ஊற்றுமலை
ஒய்யாரக்குடியிருப்பு
கலியன்குண்டூர்
கலிங்கப்பட்டி
நல்லூற்று
சாந்தபுரம்(மெஞ்)
சாமிக்குடியிருப்பு
சிவசைலனூர்
சின்னத்தம்பிநாடார்குடியிருப்பு
செபஞானபுரம்(தென்)
செண்பகப்பேரி
சேர்வைக்காரன்மடம்(புது)
தளவாய்புரம்(கைலாச)
தாளைவிளை
தேரிப்பனை
தேரிக்குடியிருப்பு
நைனாம்பட்டி(வாகை)
பணிசகுளம்
பத்தமடை
பாணாங்குளம்
கழுதூர்
சருவந்தாவு
காட்டுப்பச்சேரி
காரிகோவில்
கானம்
கீழச்சுரண்டை
குண்டல்
குலசேகரன்குடி
கொத்தனேரி
சவரிச்சநாடான்குடி
புதுச்சுரண்டை
புதூர்(இடையன்குடி) 
பூச்சிக்காடு
பூலாங்குளம்
மேலச்சுரண்டை
வஞ்சிக்குடியிருப்பு
வாத்தியார்குடியிருப்பு
வீரகேரளம்புதூர்
வீரமாணிக்கம்
வெள்ளாளன்குளம்
ஸ்ரீவைகுண்டம் கோட்டை

1834
அடைச்சாணி
அச்சாவு
அடைக்கலபுரம்(மெஞ்)
அணைஞ்சசேர்வைக்காரன்பட்டி
அத்திகுளம்
ஆழ்வார்திருநகரி
ஆழ்வார்துலுக்கன்பட்டி
ஆவுடையாநாடானூர்
ஆனந்தபுரம்
இரட்சணியபுரம்(நாலு)
இளையபெருமாள்விளை
உதயநேரி
ஒய்யான்குடி
கச்சனாவிளை
கடையநல்லூர்
காடுவெட்டி(உக்)
குமாரகிரி
கோமந்தனூர்
சிவநாராயனபுரம்
சீதாகுளம்
சீதாவிளை
சுகன்குடியிருப்பு
செவனைக்காரன்விளை
தர்மநகரம்
திருக்கழூர்
நல்லதம்பிநாடான்விளைம
நொச்சிக்குளம்
பட்சேரி(சாத்)
பட்சேரி(பன்)
பன்றிகுளம்(ஆசீர்)
பழங்குளம்
பனையடிப்பட்டி
பாகனேரி
பாட்டக்கரை
பிள்ளைவிளை
மருதப்பபுரம்
மகுதாயபுரம்
மருதம்புத்தூர்
மாணிக்கபுரம்
மேலநகரம்
வீராணம்
விசுவாசபுரம்(சாத்)
விசுவாசபுரம்(பேர்ப்)

1835
அகத்திவேலி
அப்புவிளை
இலக்கரிவிளை
ஏழாயிரம்பண்ணை
ஓடைமரித்தான்
கல்கட்டுவிளை
கல்விளை
கீழக்குளம்
கூழையன்குண்டு
சமாதானபுரம் (சுவி)
சிங்கிகுளம்
சுகநகரம்
சௌக்கியபுரம்(சுவி)
ராஜகோபாலப்பேரி
டக்கர்புரம்
தெய்வநாயகப்பேரி
பாப்பாக்குடி
புதுக்குடி(ஸ்ரீவை)
புதூர்(செவ்)
லெப்பைக்குடியிருப்பு
வடகரை(மெஞ்)
வள்ளியம்மைபுரம்
வாகைக்குளம்(மெஞ்)
வாகைநேரி

1836
இளவரசனேந்தல்
சிறப்பூர்
சுவிசேஷபுரம்
தட்டப்பாறை
பணகுடி
மகிழ்ச்சிபுரம்(பேர்ப்)
மூன்றுடைப்பு
மெய்யூர்
ஜோதிநகரம்

1837
ஆதாளிகுளம்
ஆலங்குளம்(வாகை)
சத்தியநகரம்
சுப்புலாபுரம்
ஞானதீபபுரம்
ரெட்டியார்பட்டி(டக்)

1838
மேற்குப்புதூர்(பேர்ப்)

தகவல் உதவி: Stanley Samuel

https://www.facebook.com/100013431796746/posts/578541822603539/