பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில் சுந்தர் சிங் 1889ல் பிறந்தார். அன்னாரின் குடும்பம் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்திருந்ததால் இந்து மத பக்தனாகவே வளர்க்கப்பட்டார். அவர் தன்னுடைய 7ம் வயதில் பகவத் கீதையை மனப்பாடம் செய்தார். அதேபோல தன்னுடைய 16 ம் வயதில் இந்து வேதத்திலும், திருக்குரானிலும் நன்றாக கற்றுத்தேர்ந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை கிறிஸ்தவ சுவிஷேசக குழுவினால் நடத்தப் பட்ட பள்ளியில் படித்தார். ஏனோ! அவருக்கு கிறிஸ்துவத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல், அதற்குஎதிராகவே இருந்தார்.தனது 14ம் வயதில் அவரது தாயார் திடீர் என இந்த உலகை எய்தினார். இந்த இழப்பை தன்னால் ஈடுகட்டமுடியாமல் மிகவும் சமாதானமின்றி தவித்து இந்த உலகத்தில் எது தான் உண்மை அல்லது சத்தியம் என்று தெரியாமல் குழம்பி தன்னை மாய்த்துக் கொள்ளவும் நினைக்கலானார்.கிறிஸ்தவ உபதேசங்களோ அல்லது இயேசவையோ அவர் தன்னுடைய இருதயத்தில் அங்கீகரிக்க முடியாமல் அது தவறு என்ற ஒரு கொள்கையை தன் மனதில் வைத்திருந்தார். ஆகவே பரிசுத்த வேதாகமத்தை கிழித்தும் இயேசுவை பிரசங்கிப்பவரை கல்லால் எறிந்தும் தன் கோபங்களை நிவர்த்தி செய்துக் கொண்டார்.ஒரு நாள் அந்த இரவில் அவருடைய எல்லாவற்றையும் மாற்றியது.மெய்யான சமாதானத்தை காணமுடியாமல்தவித்த அவர் 1903 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுங்குளிரில் லூதியானா அதி விரைவு புகைவண்டி அவருடைய வீட்டை கடந்து செல்லும் பொழுது ரயில் தண்டவாளத்தில் படுத்து புகைவண்டியில் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆகவே அவருக்கு தூக்கம்வராமல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தவர், தன்னையும் அறியாமல் அந்தநாள் இராத்திரி ஓ! கடவுளே, கடவுள் ஒருவர் இருப்பாரானால் எனக்கு உம்மை வெளிக்காட்டும் என்று கண்ணீரோடு மன்றாடினார். அவர் தன்னை தானே மாய்த்துக் கொள்ள வேண்டிய அந்த கடைசி மணித் துளிகளில் அதாவது அந்த புகை வண்டி வரவேண்டிய சமயத்தில் அவர் அறை முழுவதும் ஒருவெளிச்சம். ம்ம்…. கதவை திறந்து பார்த்தார். சூரியன் இன்னும் உதிக்கவில்லை. அங்கே இருள் மாத்திரமே பார்க்க நேரிட்டது. கதவை மூடினார். மீண்டும் வெளிச்சம் பிரகாசித்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த அன்னாரின் ஞானத்திற்கு எட்டாத ஒருவர் அவருக்கு முன்பாக தோன்றினார்.ஒரு தேவ சத்தம். எத்தனை நாட்கள் என்னை மறுதலிப்பாய்.?உனக்காக நான் மரித்தேனே…! என் ஜீவனை உனக்காக தந்தேனே..!சுந்தர் சிங் அவரை பார்க்கும் போது அவருடைய கரங்களில் ஆணி கடாவப்பட்டிருந்தது.ஆனால் அவருடைய மன்றாட்டும் அவருடைய எதிர்பார்ப்பும்; அவர் வணங்குpற குல தெய்வங்களில் ஒருவர் தவிர இயேசு இல்லை. ஆனால் இவர் இயேசு தான் வேறுயாரும் இல்லைஎன்பதை கண்டு கொண்டார். அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று கண்டு காலம் தாழ்த்தாமல் அவரின் பாதத்தில் விழுந்த அந்த ஷணமே, தன் உள்ளத்தில் இதுவரை உணராத ஒருவித எல்லையில்லா சந்தோஷம் சமாதானத்தைஅனுபவித்தார். ஆம் அந்த தரிசனம் விலகியது. ஆனாலும் விலகாத அந்த சந்தோஷம் சமாதானத்தை தொடர்ந்து அனுபவித்தார். அவருடைய வாழ்க்கை மாறியது.1905 ம் ஆண்டு, அவருடைய பிறந்த நாளில் சிம்லாவிலுள்ள ஆங்கில சபையில் ஞானஸ்நானம் பெற்று தன்னுடைய வாழ்க்கையை நம்முடைய ஆண்டவராகிய. இயேசுகிறிஸ்துவுக்குதன்னை கிறிஸ்தவ சாதுவாக அர்ப்பணித்தார். அன்று முதல் அவர்சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்பட்டார். அனேக நாடுகளுக்கும் தேசங்களுக்கும் சுவிஷேசத்தினிமித்தம் தேவன் கொண்டு போனார்.இவர் எழுதின புத்தகங்கள்.He At the masters feet (1922)Reality and religion (1923)Search after Reality (1924)Spiritual Life (1925)Spiritual World (1926)Real Life (1927)With and Without Christ (1928)கடைசியாக 1929 ல் வியாபாரக்காரர்களோட திபெத்துக்கு பல மைல்கள் ஏற்றமும் இறக்கமும் கூடிய பனி மலைகளுக்குள்ளாக நடந்து போனார். என்ன நடந்தது என்று தெரியாது. அனேகர் அவரை தேடிப் போனார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.அப்படியே தேவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரை ““Apostle with bleeding feet” என்று அழைப்பார்கள்.The Life of Sundar Singh1889 Born at Rampur, Punjab1903 Conversion1904 Cast out from home1905 Baptized in Simla; begins life as a sadhu1907 Works in leprosy hospital at Sabathu1908 First visit to Tibet1909 Enters Divinity College, Lahore, to train for the ministry1911 Hands back his preacher's license; returns to the sadhu's life1912 Tours through North India and theBuddhist states of the Himalayas1918 to 1922 Travels worldwide1923 Turned back from Tibet1925 to 1927 Quietly spends time writing1927 Sets out for Tibet but returns due to illness1929 Attempts to reach Tibet and disappears.
ohnjohnii@yahoo.com28 May 2019 at 20:44
ReplyDeleteI represent a group of people who are very much interested in Apocalypse 11 and the Two Witnesses. We have found what we believe to be references to the activities of these Witnesses in other parts of the Book of Apocalypse. For instance, the two wings of a great eagle in Apocalypse 12 and in Apocalypse 14, not so much the 144,000 (those with whom the covenant of Christ's sacrifice on the Cross is being confirmed), but in verse 6, an angel flying in the midst of Heaven, the description of which matches Apocalypse 10:11; and, verse 8 matches up with Apocalypse 18 which had another angel that came down from Heaven. We also firmly believe that Daniel 9:27 about confirming the covenant also refers to one of the Witnesses along with Apocalypse 14:9~12. All these activities certainly have to do with confirming God's covenant with man and are consistent with the mandate given to the Two Witnesses. Apocalypse 10:1 talks about: "And I saw another mighty angel come down from Heaven, clothed with a cloud, and a rainbow was on his head, and his face was as the sun, and his feet as pillars of fire." This seems to match up with Apocalypse 14:9~12.
We are in possession of a Treatise written by an Anonymous Priest entitled: "The Witnesses Are Coming!" https://sites.google.com/view/thewitnessesarehere
We are currently awaiting the addition of three more segments to add to the five already in this document, all entitled: "Blood Moons Over Fatima" (BMOF). We would imagine that your interests would take you first to BMOF-III & BMOF-V, as they specifically have to do with the Witnesses, and then flesh that out with the other BMOF Treatises.
We were greatly encouraged and emboldened in seeing that you were quoting from the Orthodox Catholics concerning St. John. In your writing, you seem to be a seeker of Truth wherever it is to be found. We consider ourselves also as seekers of Truth wherever it is to be found. Believe it or not, we are pre- Vatican II traditionalist Catholics who study the Bible every single day as a part of our spirituality. We only yesterday, in fact, found the Orthodox tract of the biography of St. John and this is what led us to your site. With the help of God's Grace we will leave no stone unturned in our quest to help our brothers and sisters in these last times of the first 6,000 years referred to in 2 Peter 3:8~13.
Please do study this material and please do acknowledge receipt of this comment to johnjohnii@yahoo.com. You may also be interested in gleaning what you can from John John II's profile on Disqus. You may also be interested in our sister's profile on Disqus, "Fatima Revisited".