Friday, 19 August 2022

*நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் திருநெல்வேலிக்கு வருகை தந்த 202 ஆம் ஆண்டு தினம் (07.07.1820 - 07.07.2022)*


*Rev.C.T.E.ரேனியஸ் ஐயரவர்கள் (1790-1838) அறிமுகப்படுத்திய, இன்றுவரை நடைமுறையிலுள்ள சபை ஒழுங்கு முறைகள்*

நெல்லை அப்போஸ்தலர் என புகழ்ந்து அழைக்கப்படும் கனம். ரேனியஸ் ஐயரவர்கள் 1814 - 1820 வரை சென்னையைச் சுற்றியுள்ள வட தமிழகத்திலும் 1820-1838 வரை 18 ஆண்டுகள் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகத்திலும் சிறப்பாக நற்செய்தி பணியாற்றினார்கள். கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் சுமார் 400 சபைகள், 150 பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டது. அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அநேக சபை ஒழுங்கு முறைகள் இன்றளவும் தென்தமிழக சபைகளில் நடைமுறையிலுள்ளது கீழ்க்கண்ட சபை ஒழுங்கு முறைகள் முதலில் அவரால் நிறுவப்பட்ட 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்களிலும் அதன்பின் அவரால் நிறுவப்பட்ட அனைத்து சபைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவற்றை நாம் காண்போம்.

*1). அனு தினமும் காலை மாலை ஆராதனையும் அவற்றில் இறையருட் செய்தியும்*

திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் உள்ள சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளில் பெரும்பாலானவற்றில் அனுதினமும் காலை மாலை ஆராதனைகள் நடைபெறுகிறது அவற்றை தொடங்கிவைத்து நடைமுறைப்படுத்தியவர் ரேனியஸ் ஐயர் அவர்கள் ஆவார் ரேனியஸ் ஐயர் அவர்களால் சுமார் 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் முதலில் காலை மாலை ஆராதனை அனுதினமும் தொடங்கப்பட்டு பின்னர் அவை அனைத்து திருச்சபைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது இன்றளவும் காலை மாலை ஆராதனை நடைபெறுகிறது பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் மக்கள் பனையேறும் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் காலையில் பனையேறி பதநீர்
இறக்க செல்லும் முன்பாக அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிற தேவாலய ஆராதனைக்கு அனைவரும் வரவேண்டும் மாலையில் மாலை பதநீர் இறக்கும் பணி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிடும் முன்பாக மாலை 7 மணி அளவில் தேவாலயத்தில் நடைபெறும் இரவு ஆராதனைக்கு அனைவரும் வரவேண்டும் ஆராதனை முடிந்தபின் வீட்டிற்கு சாப்பிட வேண்டும்
காலை-மாலை ஆராதனைகளில் கட்டாயம் வேதபாடம் வாசிக்கப்பட வேண்டும் வாசிக்கப்பட்ட வேத பாடத்திலிருந்து இறையருட் செய்தி வழங்கப்பட வேண்டும் இதை சபையின் சட்ட திட்டமாக ரேனியஸ் ஐயர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் 200 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் இந்த முறை பின்பற்றப்படுகிறது

*2). ஓய்வுநாள் அரிசி காணிக்கை சேகரிப்பு திட்டம்*

1829 டிசம்பரில் துண்டுபிரசுரம் சங்க செலவுக்காக காணிக்கை சேகரிக்கும் பண்டிகை நடைபெற்றபோது பேணியே சால் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ மிஷன் கிராமமான அருளூர் கிராமத்தின் சபை ஊழியரான முத்தையன் உபதேசியாரின் மனைவி தாயாரருளாயி அம்மாள் அவர்கள் தாம் உணவு சமைக்கும்போது தினந்தோறும் எடுத்துவைத்த பிடி அரிசியை சேர்த்து வைத்து மூட்டையில் போட்டு அதை வண்டியில் ஏற்றி வந்து பண்டிகையின்போது படைத்தார்கள் அதுகுறித்து ரேனியஸ் ஐயர் அவர்கள் விபரம் கேட்டபோது தாயாரருளாயி அம்மாள் நாம் ஒவ்வொரு நாளும் உணவு சமைக்கும் முன்னர் எடுத்து வைத்த பிடி அரிசி என்பதை எடுத்துக் கூறினார்கள் அதை நன்கு கேட்ட இரேனியஸ் செய்கிறவர்கள் உபதேசியார் கூட்டத்தில் பிடி அரிசி காணிக்கை விபரத்தை அனைத்து உபதேசியார் களுக்கும் விபரமாக எடுத்துக் கூறி அனைத்து சபைகளிலும் அதை அறிவிக்கச் சொல்லி அனுதினமும் எடுத்து வைக்கும் பிடி அரிசி காணிக்கையை வாரந்தோறும் ஞாயிறு அன்று தேவாலயத்தில் படும்படியாக சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் இன்றளவும் தென்தமிழகத்தில் கிராம சபைகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது கல்லிடைக்குறிச்சி சபை வரலாறு குறித்து கல்லிடைக்குறிச்சியில் சபை ஊழியராக இருந்த திரு விக்டர் சதானந்தர் அவர்கள் தாம் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தமது தகப்பனாரும் கல்லிடைக்குறிச்சியில் மூன்று முறை சபை ஊழியராக இருந்ததால் அறிந்து கொண்ட ஒரு காரியத்தை பகிர்ந்துகொண்டார்கள் 1906-1910 வரை நடைபெற்ற கல்லிடைக்குறிச்சி தேவாலய கட்டுமான பணியின்போது சபை மக்கள் கொடுத்த அரிசி காணிக்கை பேருதவியாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள் சபை வளர்ச்சிக்கும் அரிசி காணிக்கை திட்டமாக இருந்தது

*3). ஒருநாள் வருமானக் கவர் காணிக்கை (லக்கோடா) படைத்தல்*

சபைகள் தங்களது வளர்ச்சிக்கு அயல் நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு நாள் வருமான கவர் காணிக்கை படைக்கும் திட்டத்தை சபைகளில் ரேனியஸ் ஐயரவர்கள் அறிமுகப்படுத்தினார்கள் இன்றளவும் இந்த கவர் காணிக்கை படைக்கும் வழக்கம் தென்தமிழக சபைகளில் நடைமுறையில் உள்ளது

*4). ஆசிரியர் பணிவுடன் கூடிய சபை ஊழியர்-Teacher Cum Catechist*

தென்தமிழக சபைகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த முறை ஆசிரியர் பணி உடன் கூடிய சபை ஊழியர் முறையாகும். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலந்து வாழும் கிராமங்களில் இம்முறை பெரிய வெற்றியை பெற்றது. தங்களது பிள்ளைகளை கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிய இந்து பெற்றோர்களுக்கு சபை ஊழியராக பணி செய்யும் பள்ளி ஆசிரியருடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது அவர்கள் அவரிடம் ஆலோசனை கேட்பது சபை ஊழியரும் இந்து மாணவ மாணவியரின் குடும்பங்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பது இந்து மாணவ மாணவியரை உயர்கல்விக்கு அனுப்புவதில் வழிகாட்டுவது என இந்து பெற்றோர்களோடு சபை ஊழியராக இருக்கும் ஆசிரியருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது இது அவர்கள் கிறிஸ்தவத்தை பிற்காலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

*5). சபை ஊழியர்களுக்கு மாதாந்திரக் கூட்டம்*

1828 முதல் சபை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டங்களை தலைமை இடமான பாளையங்கோட்டையில் வைத்து ரேனியஸ் ஐயர் அவர்கள் நடத்தினால் அதில் சபை ஊழியர்களுக்கு வேத அறிவு வளர வேத பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது சபை நிலவரம் சபை வளர்ச்சி கேட்டு அறியப்பட்டது பிரச்சினைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டது காலரா விஷக்காய்ச்சல் ஏற்படும் காலகட்டத்தில் எவ்வாறு சபை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற போதனை வழங்கப்பட்டது

*6). சங்க காணிக்கை முறை தொடக்கம்*

சபை உறுப்பினர்கள் அதற்கான சந்தா செலுத்தும் முறை தென் தமிழகத்தில் சங்க காணிக்கை முறை என்று அழைக்கப்படுகிறது தற்போதைய சங்க காணிக்கை முறைக்கு முன்னோடியாக அமைந்தது ரேனியஸ் ஐயரவர்களால் தொடங்கப்பட்ட சங்க காணிக்கை திட்டம்.
 நமக்கு மிஷனரிகளை அனுப்பி அவர்களை பண உதவியால் தாங்கும் CMS மிஷன் சங்கத்துக்கு உதவியாக ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு தொகையை (கால் பணம் - 23 காசு) காணிக்கையாகக் கொடுப்பதே இந்த முறை.

*7. கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் அமைத்தல்*

புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை ஊர் விலக்கம் செய்து கிராமத்தை விட்டு புறக்கணிப்பது அவர்களது வீடு மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற பல துன்பங்களை பிற மதத்தினர் செய்ததால் கிராமங்களில் சிறுபான்மையாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு என அந்த வட்டாரத்திலேயே தர்ம சகாய சங்கம் மூலம் அல்லது நன்கொடையாளர் மூலம் பெரிதானதோர் நிலம் வாங்கி அதில் தேவாலயம், பள்ளிக்கூடம் கட்டி குடிநீர் கிணறு அமைத்து அந்த இடத்தில் துன்ப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களை குடியேற்றம் செய்தல் என்ற திட்டமே கிறிஸ்தவ மிஷன் கிராமம் அமைப்புத் திட்டம்.
.1823 இல் முதல் கிறிஸ்தவ கிராமமாக பேய்குளம் வட்டாரத்தில் அருளூர் கிராமம் உருவாக்கப்பட்டது.
1837 இல் கடைசி கிறிஸ்தவ கிராமமாக சாத்தான்குளம் வட்டாரத்தில் சத்தியநகரம் கிராமம் உருவாக்கப்பட்டது.
தென் தமிழகத்தில் ரேனியஸ் ஐயரவர்களால் 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

*8.) ஆலய பரிபாலன நிதி-LCF*

சபைகளின் தேவாலய செலவினங்களை சபை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் 1823 இல் ஆலய பரிபாலன நிதி-LCF ரேனியஸ் ஐயரவர்களால் தென்தமிழகத்தின் CMS சபைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவாலய விளக்குக்கான தீபத்திற்கு என எண்ணெய் செலவினங்கள், தேவாலய பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்கு என உழைத்து ஊதியம் பெறும் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு தொகையைக் கொடுப்பது அந்தத் தொகையை ஆலய பரிபாலன திதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதில் இருந்து தேவாலய செலவினங்கள் செய்யப்பட்டது.
 இம்முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது

*9). சபை ஒழுங்கு கட்டுப்பாடு கடைபிடித்தல்*

,சபை ஒழுங்குக்கு புறம்பாக திருமணம் செய்தோர் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்தோர் ஆகியோர் சபை நீக்கம் செய்யப்பட்டனர்.
 சபை ஒழுங்கு சரியாக கடைபிடிகாபட்டது

*10,) திருமண்டல அளவில் ஆண்டுக்கு ஒரு முறை மாம்பழச் சங்க பண்டிகை*

திருமண்டல அளவில் சபை மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் பண்டிகையாக 09.07.1834 இல் மாம்பழச் சங்க பண்டிகை தொடங்கப்பட்டது. கைம்பெண் நல்வாழ்வு நிதிக்காக இப்பண்டிகை தொடங்கப்பட்ட போதும் அக்காலம் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழச் சங்க பண்டிகை என சபை மக்களால் அழைக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை 9 ஆம் நாளை ஒட்டி குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது கிறிஸ்தவர்கள் ஆவதற்கு முன்பு சென்று வந்த தொகை மற்ற கிறிஸ்தவர்கள் ஆன பின்பும் இந்த திருவிழாவிற்கு வண்டி கட்டி சென்று வந்தனர் இதை பாளையங்கோட்டையில் நேரில் கண்ட ரேனியஸ் அதே நாளில் இந்த பண்டிகை நாளை அமைப்பு கிறிஸ்தவர்கள் அனைவரும் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் இந்த பண்டிகையை கொண்டாட செய்தார் அதுமுதல் கிறிஸ்தவர்கள் திரள் கூட்டமாக மாட்டு வண்டிகளில் ஆண்டு தோறும் இப்பண்டிகைக்கு வந்து தங்கி ஆண்டவரை வழிபட்டு சென்றனர்.
.இப்பண்டிகையே பிற்காலங்களில் வட்டாரத் தலைமை இடங்களில் தவச உற்சவம் எனும் தோத்திரப் பண்டிகை தொடங்குவதற்கு மூல காரணமாக அமைந்தது.

*(J.ஜான் ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)*

No comments:

Post a Comment