Friday, 19 August 2022

CMS Evangelical Church History


1870 க்குப் பிறகே ஆக்ஸ்போர்டு எழுப்புதல் இயக்கம் இங்கிலாந்தில் வலுப்பெறுகிறது அந்த காலகட்டத்திற்கு பின்பு வந்த எஸ் பி ஜி மிஷனரிகள் சடங்கு ஆச்சாரங்களை அதிகமாக திருச்சபைக்குள் புகுத்தினர் இங்கிலாந்திலும் ஆங்கிலிக்கன் திருச்சபை யில் இவை இடம் பெறலாயிற்று சடங்கு ஆசாரங்களில் ஆர்வம் மிக்கவர்கள் ஆங்கிலிக்க சபைக்குள் அதிகமாயினர் இவர்களால் ஆங்கிலிக்கன் திருச்சபை மூலம் நற்செய்தி பணியை செய்து வந்த மிஷனரி இயக்கங்களிலும் சடங்கு ஆச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன தொடக்ககால எஸ்பிஜி மிஷனரிகள் தங்கள் சபைகளில் சடங்கு ஆசாரங்களை அதிக அளவில் நடைமுறைப்படுத்தவில்லை 
நாசரேத் மிஷினரி Rev. மர்காஷிஸ் ஐயர் அவர்கள் காலமுதல் சடங்காச்சாரங்கள் எஸ்பிஜி சபைக்குள் அதிகமாக புகுத்தப்பட்டது குறிப்பாக நாசரேத்தில் அதன் சுற்று கிராமங்களில் சாயர்புரத்தில் அதன் சுற்று கிராமங்களில் சடங்கு ஆச்சாரங்கள் அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டன இதற்கு அவ்விரு இடங்களிலும் இருந்த குருமார் காரணம்.

 அக்காலத்தில் எஸ் பி ஜி க்கான பேராயராக நியமிக்கப்பட்ட மகாகனம் கால்டுவெல் அவர்கள் இக்காரியத்தில் உடன்படவில்லை அக்கால எம் டி சி கமிட்டி மகாகனம் கால்டுவெல் அத்தியட்சர் அவர்களை சடங்காச்சாரங்களை வலுவாக நடைமுறையாக கட்டாயப்படுத்திய போதும் பேராயர் கால்டுவெல் இக்காரியத்தில் உடன்பட மறுத்தார் ஆதலால் கால்டுவெல்லை காட்டிலும் மர்காஷிஸ் க்கு எம் டி சி கமிட்டி முக்கியத்துவம் தந்தது இதனால் கால்டுவெல் தமது இறுதிக்காலத்தில் மிகுந்த மனவேதனை அடை ந்ததாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

CMS சுத்தாங் க சபை வரலாறு நூல்
CMS மிஷினரி இயக்கத்தின் அடிப்படை கோட்பாடு சடங்கு ஆச்சாரம் இல்லாத சுத்தாங்க சுவிசேஷம் ஆனால் எஸ்பிஜி மற்றும் சி எம் எஸ்
இணைப்பால் இந்த அடிப்படைக் கோட்பாடு மாற்றம் பெற்றுவிடும் என்ற கவலை கொண்ட சி எம் எஸ் சபை பெரியோர்கள் சபை குருவானவர்கள் இந்த ஐக்கிய திட்டத்தை ஏற்கவில்லை அந்நேரத்தில் சிஎம்எஸ் கோட்பாடுகள் மாற்றம் செய்யப் படாது என்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது ஆனால் அவை உடனடியாகவே மீறப்பட்டது 
ஆதலால் தவறுகள் இருபுறத்திலும் உள்ளன

 தோரணக்கல் திருமண்டல பேராயர் நியமனம் குறித்து பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட இரு சீனியர் குருவானவர்கள் சுத்தாங்கப் பிரிவினைக்கு காரணம் என பதிவிடுவது சரியான முறை அன்று.

IMS மிஷனரி இயக்கம் உருவாகவும் அதன் முதல் மிஷனரியாக சென்றவரும் ஆன Rev. சாமுவேல் பாக்கியநாதன் ஐயர் அவர்கள் 12 மொழிகளை நன்கு அறிந்தவர் 
பேராயர் அசரியா Dornakkal திருமண்டலத்திற்குள் வரும் முன்பாகவே ஏராளமான சபைகளை கட்டி எழுப்பியவர் 

அவர் குருவானவராக தலைமை மிஷனரியாக அங்கு பணி செய்தபோது குருத்துவ பட்டம் பெறாத சாதாரண மிஷனரியாக தோர்நக்கல் சென்றவரே பேராயர் அசரியா அவர்கள் ஆனால் இக்காரியத்தில் வரலாறு எவ்வாறு மிஷநரி ரேனியஸ் க்கு இருட்டடிப்பு செய்யப்பட்ட தோ அதேபோன்று சாமுவேல் பாக்கியநாதன் அவர்களுக்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டது 
தன்கீழ் சாதாரண மிஷனரியாக வந்த ஒருவர் ஓரிரு ஆண்டுகளில் பேராயராக சுப்பீரியர் ஆக உயர்த்தப்படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் தனது 65 வயது வரை கர்த்தருடைய பணியை அங்கு செய்து ஓய்வு பெற்று பாளையங்கோட்டைக்கு வந்தவரே Rev. சாமுவேல் பாக்கியநாதன்

அக்காலத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட போட்டோ சிறந்த சான்றாக உள்ளது

இந்த போட்டோவில் சாமுவேல் பாக்கியநாதன் அவர்களும் சாலமோன் பாக்கியநாதன் அவர்களும் உட்கார்ந்த நிலையில் இருப்பதும் பிற்காலம் பேராயர் ஆக 
வயது
பணிமூப்பு 
குருப்பட் டம் பெற்ற ஆண்டு
எதையும் கணக்கில் எடுக்காமல் ஐரோப்பியர்கள் உடன் கொண்டிருந்த பழக்கத்தின் காரணமாக பேராயராக சாதாரண மி ஷனரி நிலையிலிருந்து உயர்த்தப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் சாமுவேல் பாக்கியநாதன் அமைதி காத்தார் பணிக்காலம் முடிந்த பின்பே வந்து சேர்ந்தார்.
சுத்தாங்க பிரிவினையில் அவருடைய பங்களிப்பு எதுவும் கிடையாது கீழ்க்கண்ட சுத்தாங்க வரலாற்று நூல் மூலம் நாம் அதை அறிந்து கொள்ள முடியும் .

பேராயராக நியமிக்கப்பட்ட மகாகனம் அசரியா அவர்களால் குறைவாக நடத்தப்பட்ட பாக்கியநாதன் சகோதரர்களில் சாலமோன் பாக்கியநாதன் அங்கிருந்து நெல்லை திருமண்டலத்துக்கு வந்து சேர்ந்தார்கள் 
1919இல் எல்லா ஆலயங்களிலும் ஆல்டர் மேஜை யில் சிலுவை வைக்க வேண்டும் என்ற திட்டத்தை எம்டிசி கமிட்டி திருநெல்வேலி திருமண்டலத்தில் வலியுறுத்தியபோது 1919இல் திருமண்டல கூட்டத்தில் அதை மறுத்து சாலமோன் பாக்கியநாதன் பேசினார்கள் வெளிநடப்பு செய்தார்கள் இந்த காரியங்கள் நெல்லை சபை வரலாற்று நூல்களில் காணப்படவில்லை கீழ்கண்ட நூலில் ஆதாரத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது சாலமோன் பாக்கியநாதன் திருமண்டலத்தை விட்டு வெளியேற்றப் படுகிறார்கள் இக்காலகட்டத்தில் Rev E.S. கார் ஐயரவர்கள் லண்டனிலிருந்து இந்த ஐக்கிய திட்டத்தால் c.m.s. பாரம்பரியம் பாதிக்கப்படும் நாசரேத்தில் உள்ள 
எஸ் பி ஜி சார்பு செமினரி இல் படித்துவரும் குருவானவர்கள் சி எம் எஸ் எல்லைக்குள் எஸ் பி ஜி வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் நடைமுறைப்படுத்துவர் என கண்டிப்புடன் எழுதிய கடிதமும் கீழ்க்கண்ட நூலில் உள்ளது சுத்தாங்க பிரிவினை குறித்து நாம் அறிந்திராத பல காரியங்கள் இந்த நூலில் உள்ளது இந்த நூலில் முழு விபரங்கள் கொடுக்கப்படா விட்டாலும் ஓரளவு விபரங்கள் உள்ளன இந்த நூலை படித்து அறிவது பிரிவினை குறித்து அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் இந்நூல் மூலம் சாமுவேல் பாக்கியநாதன் ஐயர் அப் பிரிவினையில் சம்பந்தப்படாதவர் என்பதை அறியலாம் அவரது தம்பி சாலமோன் பாக்கியநாதன் சம்பந்தப்பட்டுள்ளது குறித்து அறியமுடியும் ஆனாலும் டயோசீசன் நிர்வாகம் சாமுவேல் பாக்கியநாதன் க்கு பென்சனை ரத்து செய்த சோக சம்பவமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
( J.ஜான் ஞானராஜ், கல்லிடைக்குறிச்சி)

*புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா*


*நிகழ்வு*

போர்ச்சுக்கல் நாட்டு அரசன் மூன்றாம் யோவானின் வேண்டுகோளின் பேரில் கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக சவேரியார் புறப்பட்டுக்கொண்டிருந்த தருணம். அப்போது சவேரியாரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம், “கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் உங்களுடைய அன்னையை ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாமே, உங்களுடைய இல்லம் மிக அருகிலேயேதான் இருக்கின்றது, மேலும் நீங்கள் அங்கு போய்விட்டால், இங்கே திரும்பி வருவது மிகக்கடினம்” என்றார். அதற்கு சவேரியார் அவரிடம், “நான் இறந்து விண்ணகத்திற்கு போவேன் அல்லவா, அப்போது என்னுடைய அன்னையை அங்கு பார்த்துக்கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டு அவருடைய நண்பர் எதுவும் பேசாது அமைதியானார். 

சவேரியார் நற்செய்தி அறிவிப்பின்மீது தணியாத தாகம் கொண்டிருந்தார்; அதற்காக அவர் தன்னுடைய குடும்பம், படிப்பு, வாய்ப்பு வசதி எல்லாவற்றையும் துறந்துவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு இறை மனிதரின் விழாவைத் தான் இன்று கொண்டாடுகின்றோம்.

*வாழ்க்கை வரலாறு*

‘இரண்டாம் பவுலடியார்’ என அன்போடு அழைக்கப்படும் பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள சேவியர் கோட்டையில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 நாள் பிறந்தார். இவருடைய தந்தை ஜான் தி ஜாசு, தாய் டோனா மரியா என்பவர் ஆவார். சவேரியாரின் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். ஆகையால் இவர் எல்லா வசதிகளையும் பெற்று வளமோடு வாழ்ந்து வந்தார்.

சவேரியாருக்கு 18 வயது நடந்துகொண்டிருந்த போது அவர் பாரிஸ் நகருக்குச் சென்று அங்கே இருந்த பார்பரா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் படித்து வந்தார். அப்போதெல்லாம் சவேரியாருக்கு ஒரு மிகச் சிறந்த பேராசியராக மாறவேண்டும், பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் எண்ணமாக இருந்தது. இந்த நேரத்தில்தான் சவேரியாரின் அறையில் வசித்து வந்த இஞ்ஞாசியார், “மனிதன் உலகமெல்லாம் தமதாக்கிகொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன” (மத் 16:26) என்று அடிக்கடி சொல்லி வந்தார். தொடக்கத்தில் இவ்வார்த்தைகளைக் கண்டுகொள்ளாது இருந்த சவேரியார், பின்னர் அதனை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது உலக வாழ்வின் நிலையாத் தன்மையை உணர்ந்துகொண்டு, ஆண்டவருக்குப் பணி செய்ய தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். 

1534 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இஞ்ஞாசியார், சவேரியாரோடு சேர்த்து ஆறுபேர் கொண்ட குழு சிறு மந்தை எனப்படும் ‘இயேசு சபை’ என்ற பெயரில் இணைந்தது. பின்னர் அவர்கள் புனித நாடுகளில் மறைபரப்புப் பணியைச் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் அங்கு முகமதியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அங்கு சென்று மறைபரப்புப் பணிசெய்யும் திட்டத்தை ஒத்தி வைத்தனர். இதற்கிடையில் 1537 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவரால் சவேரியார் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1538 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டு அரசன் மூன்றாம் யோவான், கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க இயேசு சபையார் செல்லலாம் என்று சொன்னபோது, இஞ்ஞாசியார் ரொட்ரிகுஸ், நிக்கோலாஸ் என்ற இருவரது பெயரையும் முன்மொழிந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் நோய்வாய்ப்படவே, இறுதியில்தான் சவரியார்தான் அங்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சவேரியார் முழுமனதோடு அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். இதனால் 1541 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 நாள் இந்தியாவை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். 

ஏறக்குறைய 13 மாதங்கள் நீடித்த இந்த கப்பல் பயணத்தில் சவேரியார் கப்பலில் இருந்த மக்களுக்கு சிறப்பான ஓர் ஆன்மீகப் பணியைச் செய்தார். அங்கு இருந்த நோயாளிகளுக்காக ஜெபித்தார், அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துச்சொன்னார். இப்படி நீண்ட பயணமானது 1542 ஆம் ஆண்டு மே 6 நாள் நிறைவுபெற்றது. ஆம், அன்றுதான் சவேரியார் கோவாவில் தரை இறங்கினார். கோவாவில் தரையிறங்கிய சவேரியார், அங்கிருந்த ஆயரைச் சந்தித்து, திருத்தந்தையிடமிருந்து அவர் பெற்றுவந்த ஒப்புதல் கடித்ததை அவரிடம் கொடுத்துவிட்டு, அவருடைய ஆசியுடன் தன்னுடைய பணியைத் தொடங்கினார். 

சவேரியார் கோவாவில் தன்னுடைய நற்செய்திப் பணியைத் தொடங்கியபோது, அங்கு நிறையக் கிறிஸ்தவர்கள் இருப்பதைக் கண்டார். ஆனால் அவர்கள் அடிப்படை ஜெபம்கூடத் தெரியாமலும் ஆன்மீக வாழ்வில் மிகவும் பின்தங்கியவர்களாகவும் இருந்தார்கள். இதனால் முழுமூச்சாக சவேரியார் அம்மக்களுக்கு மத்தியில் பணிசெய்தார். அக்காலத்தில் கோவாவில் வெறும் நான்கு குருக்கள்தான் இருந்தார்கள், அவர்களுடைய உதவியையும் பயன்படுத்திக்கொண்டு சவேரியார் நோயாளிகளைச் சந்திப்பது, அவர்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுப்பது என்று அவர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தினார். இதனால் குறுகிய காலத்திலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமானது. 

சவேரியார் கோவாவில் நற்செய்திப் பணியை ஆற்றிவிட்டு தென் தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்களில் நற்செய்திப் பணி செய்யத் தொடங்கினார். மணப்பாடு என்ற இடத்தைத் தலைமை இடமாக வைத்துக்கொண்டு சவேரியார் அங்கு இருந்த மக்களுக்கு சிறப்பான ஒரு நற்செய்திப் பணியை ஆற்றினார். அக்காலத்தில் கடற்கரைக் கிராமங்களில் முகமதியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவர், சவேரியார் தனக்கு எப்போதும் பேருதவியாக இருந்த போர்ச்சுக்கல் படையை வைத்துக்கொண்டு அவர்களது ஆதிக்கத்தை முறியடித்தார். இதனாலும் நிறையப் பேர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். சவேரியார் தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டு மக்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்தார்; கையில் ஒரு மணியை வைத்துகொண்டு, அதில் சத்தம் எழுப்பிக்கொண்டு மக்களை கூட்டிச் சேர்த்து, அவர்களுக்கு ஞான காரியங்களைச் சொல்லிக்கொடுத்து, மக்களை விசுவாசத்தில் வளர்த்தெடுத்தார். 

இங்கிருந்தபோது சவேரியார் இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுவார், “இந்த மக்களுக்கு திருமுழுக்குக் கொடுத்துக் கொடுத்து என்னுடைய கை மரத்துப் போய்விட்டது, இவர்கள் சொல்லக்கூடிய விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லி சொல்லி என்னுடைய நா வறண்டுபோய்விட்டது”. அந்தளவுக்கு சவேரியார் தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து இங்கே நற்செய்திப் பணிசெய்தார். இரண்டு ஆண்டுகள் கடற்கரை கிராமங்களில் பணிசெய்த சவேரியார் திருவிதாங்கூர் மன்னனையும் சந்தித்து, அவருக்கு நற்செய்தி அறிவித்து அவரையும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். 

இதற்குப் பிறகு சவேரியார் இலங்கைக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். அங்கிருந்து அவர் ஜப்பான் நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். ஜப்பானில் புத்த மதம் ஆழமாக வேறொன்றி இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சவேரியார் காசோஷிமா, மியாக்கா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவின் மீது நம்பிக்கைகொள்ளச் செய்தார். அங்கு ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகளின் காரணமாக சவேரியார் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். சீனாவில் கிறிஸ்தவ மறைபோதகர்கள் வேதம் போதிப்பதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படியிருந்தாலும் 1552 ஆம் ஆண்டு சவேரியார் அங்கு சென்று நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார். அவர் சான்சியான் தீவில் இறங்கியபோது அவருடைய உடல் வலுவிழந்தது. இதனால் 1552 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் சவேரியார் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். சவேரியார் இறக்கும்போது அவருக்கு வயது வெறும் 46 தான். அப்போது சவேரியாரோடு உடன் இருந்தவர் அந்தோனி என்பவர் ஆவார். அவர் சவேரியாரின் உடலை அவருடைய சொந்த மண்ணுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, அவருடைய உடலில் சுண்ணாம்பைத் தடவி புதைத்துவிட்டுவந்தார்.

1553 ஆம் ஆண்டு பெப்ருவரி 17 ஆம் நாள் அவரும் அவரோடு சேர்ந்து இன்னும் ஒருசிலரும் சவேரியாரின் உடலை எடுத்து வரச் சென்றனர். ஆனால் அவர்கள் சவேரியாருடைய கல்லறையைத் திறந்து பார்த்த போது அவருடைய உடல் அழியாமல் இருப்பது கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். பின்னர் அவர்கள் சவேரியாருடைய உடலை கோவாவில் இருக்கும் போம் ஜேசு என்ற ஆலயத்தில் வைத்தனர். அது இன்று வரையும் அழியாமல் இருக்கின்றது. சவேரியார் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பு கொண்டு, அவருடைய பணியைச் செய்திருந்தால், அவர் சவேரியாரின் உடலை இப்படி அழியாமல் பாதுகாத்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளலாம். 

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

*1. நற்செய்தி அறிவிப்பில் தாகம்*

ஆண்டவர் இயேசு விண்ணகம் செல்வதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களிடம் சொல்வார், “நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று (மாற் 16:15). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் தூய சவேரியார் என்று சொன்னால் அது மிகையாகாது. சவேரியார் நற்செய்தி அறிவிப்பிற்காக பயணித்த தூரம் ஏறலாம். அது இன்றைக்கு எவராலும் பயணப்பட முடியாத தூரம். சவேரியார் இங்கு வந்து பணியாற்றிய 10 ஆண்டுகளில் எவ்வளவோ பணிகளைச் செய்தார். மொழி தெரியாத இடத்தில் வந்து மொழியைக் கற்றுக்கொண்டு, மக்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம், ஏராளம். அவற்றை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது.

வரலாற்று ஆசிரியரான மார்கோ போலோ சவேரியார் இந்திய மண்ணில் ஆற்றிய பணிகளைக் குறித்து வியந்து பாராட்டுவார். சவேரியார்தான் மறைக்கல்வி அறிவிப்பிற்கான முன்னோடி என்று அவர் சுட்டிக்காட்டுவார். அந்தளவுக்கு சவேரியார் இந்த மண்ணில் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆகவே, தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று நற்செய்தியை அறிவிப்பதில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம், எதிர்வரும் துன்பங்களைத் துணிவோடு எதிர்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

- *மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*


  

*புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா 03 12 2019*


*மறையுரைச் சிந்தனை*

தற்போது தமிழகத்தின் கடைகோடியிலுள்ள கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் பேராலயம் புனிதராலேயே நிறுவப்பட்டது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூறுகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்வு. அந்த ஆலயம் கட்ட தூய சவேரியார் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரிடம் இடம் கேட்டபோது அவர், “அதெல்லாம் முடியாது” என்று மறுத்துவிட்டார். தூய சவேரியார் மீண்டுமாக அவரிடம், “எனக்கு ஓர் ஆட்டுத் தோல் அளவுக்கு இடம்கொடுத்தால் போதும், நான் அதில் ஆலயம் கட்டிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஓர் ஆட்டுத்தோலைக் காட்டினார். அதைப் பார்த்த மன்னர், இந்த ஆட்டுத்தோல் எவ்வளவு இடம் பிடித்துவிடப் போகிறது என்று எண்ணி, அதற்கு சரி என சம்மதம் தெரிவித்தார். 

அதன்பிறகு தூய சவேரியார் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆட்டுத்தோலை கீழே விரித்தார். அந்த ஆட்டுத்தோலானது ஏற்கனவே இருந்த அளவைவிட விரிந்துகொண்டே சென்றது. இதைப்பார்த்து திருவிதாங்கூர் மனனர் தூய சவேரியார் சாதாரண மனிதர் அல்ல, அவர் இறைவனுடைய அடியார் என்பதை உணர்ந்து ஆலயம் கட்ட போதுமான இடம் தந்தார். இதன் நிகழ்வுக்குப் பிறகு மன்னர் தூய சவேரியாரின் நண்பரானார். அதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாற இருந்த தடையும் நீக்கனார். 

தூய சவேரியார் எப்படி இறைவனின் கையில் வல்லமையுள்ள புனிதராக விளங்கினார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆம், இன்று திருச்சபையானது இந்திய நாட்டின் திருத்தூதரும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலருமான தூய பிரான்சிஸ்கு சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைக்கு நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொன்னால் அது தூய சவேரியால் ஆற்றிய பணியினால்தான் என்று சொன்னால் அது மிகையாது. 

இந்த நல்ல நாளிலே தூய சவரியாரின் வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூய சவேரியார் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

 சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525 ஆம் ஆண்டு, உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அங்கே மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530 ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில்தான், "நான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்' என்ற ஆசை கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக்கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.

ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை- அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541 ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். அங்கே சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக்கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.

பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

  மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்குச் சென்று இறை பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கொச்சியிலும், கோவையிலும் சேவை செய்தார். மீண்டும் 1545-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.

சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, "ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.

இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது. ஆம் தூய சவேரியாரின் உடலில் எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 

1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. 

தூய சவேரியாரின் வாழ்வை ஆழ்ந்து உற்று நோக்கும்போது நாம் கண்டுகொள்ளக்கூடிய ஓர் ஆழமான உண்மை அவரிடம் இருந்த நற்செய்தி அறிவிற்கான தாகம்தான். அறியாத இடத்தில், புரியாத மொழி பேசும் மக்கள் மத்தியில் அவர் ஆற்றிய நற்செய்திப் பணி இன்றைக்கும் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. எனவே அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க முன்வரவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கும் அழைப்பும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவை இன்னும் அறியாத மக்களுக்கு அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க முன்வருவோம். அப்படி நற்செய்தியை அறிவிக்கும்போது அது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். (முதல்வாசகம்)

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொருநாளும் அவ்வூரில் இருந்த மருத்தவமனைக்குச் சென்று, அங்கே இருந்த நோயாளிகளுக்கு விவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை வாசித்துக்காட்டி, விளக்கம் அளித்து வந்தார். பெரியவருடைய இந்த நற்செய்தி அறிவிப்புப் பணி அங்கிருந்த நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல அவருக்கு கண்பார்வை மங்கியது. அப்போது அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர் அவரிடம், “நீங்கள் நீண்ட நேரம் எதையும் கூர்ந்து படிக்கவேண்டாம்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவர் தனக்கு கண்பார்வை மங்கியபோதும் தன்னால் முடிந்த அளவுக்கு விவிலியத்தில் இருக்கும் சில முக்கியமான பகுதிகளை மனப்பாடம் செய்தார்.
 
தனக்கு கண்பார்வை முற்றிலுமாக போனபோதும் ஒவ்வொருநாளும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தான் மனப்பாடம் செய்த பகுதிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நற்செய்திப் பணி செய்தார். இவ்வாறு அந்த பெரியவர் தான் இறக்கும்வரைக்கும் நற்செய்திப் பணியை தொடர்ந்து ஆற்றி நற்செய்திப் பணியாளராக வாழ்ந்தார்.

நாம் எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும், அது முடியாவிட்டால் குறைந்தது நாம் இருக்கும் இடத்திலாவது நற்செய்தியை அறிவிப்போம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. 

ஆகவே தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரை நமக்குக் கொடையாகக் கொடுத்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் அவரைப் போன்று நாமும் இயேசுவை பற்றி நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.  

- *மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*


   *"GOD IS LOVE"*
To receive Daily gospel in Watsapp message to : 9986445900 
(Or)


*முதல் சீர்திருத்த (பிராட்டஸ்டன்ட்) கிறிஸ்தவ நாடார்**உயர்திரு. தாவீது சுந்தரானந்தம் (1772-1806)*

*முதல் சீர்திருத்த (பிராட்டஸ்டன்ட்) கிறிஸ்தவ நாடார்*

*உயர்திரு. தாவீது சுந்தரானந்தம் (1772-1806)*

*தென்தமிழக்தின் முதல் சீர்திருத்த கிறிஸ்தவ இரத்தசாட்சி*

தாவீது சுந்தரானந்தம் அவர்களுடைய இயற்பெயர் சின்னமுத்து. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் 
சாத்தான்குளம் மற்றும் முதலூர் க்கு இடையே உள்ள காலன்குடியிருப்பு
 என்ற கிராமத்தில் 1771 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள். பிறந்தார்.

இவருடைய பெற்றோர் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள். 
சின்னமுத்துவுக்கு
 8 வயதாக இருக்கும்போது ஏற்பட்ட வைசூரி நோயினால் இவருடைய பெற்றோர்கள் மரித்துப்போனார்கள். ஆகவே சின்னமுத்தும் அவர் சகோதரியும் விஜயராமபுரத்தில் இருந்த இவர்களுடைய தாய்மாமா வீட்டில் இருந்து வளர்ந்து வந்தார்கள்.

சின்னமுத்து இளம் வயதிலேயே மிகவும் புத்திகூர்மை மிக்கவராய் இருந்தார். பல காரியங்களை கற்றுக்கொள்வதில் 
ஆர்வம் காட்டினார். 
நாட்டு வைத்தியம், ஜோதிடம், சிலம்பம் ஆடுதல், மற்றும் மல்யுத்தம் போன்றவற்றை கற்றுக்கொண்டார். 

சின்னமுத்து 17 ஆம் வயதாக இருக்கும்போது இவருடைய செயல்பாடுகள் அவருடைய அத்தைக்கு பிடிக்கவில்லை.  
ஒருமுறை இவருடைய அத்தை கொடுத்த வேலையை செய்ய தவறியதற்க்காக தயிர் கடையும் மத்தால் இவரை விரட்டி விரட்டி அடித்ததினால் அவமானத்தையும் வருத்தத்தையும் அடைந்தார் மேலும் அதைத் தாங்க முடியாமல் விஜயராமபுரம் கிராமத்தைவிட்டு வெளியேறி சாத்தான்குளம் வரை நடந்துசென்று அங்கிருந்து இராஜபாளையத்திற்கு கருப்பட்டி ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியில் பிரயாணப்பட்டு, ராஜபாளையம் சென்றார் பின்னர் அங்கிருத்து தஞ்சாவூருக்கு சென்றார்.

தஞ்சாவூர் சென்றடைந்த சின்னமுத்து அங்கு ஒரு கடையில் வேலையாளாக சேர்ந்தார். 
அப்பொழுது ஒரு நாளில் சந்தையில் நின்று நற்செய்திபணி செய்துகொண்டிருந்த குருவானவர் கிறிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்தி பணியினால் கவரப்பட்டார். ஆகவே அவரிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. சுவாட்ஸ் ஐயர் மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கேள்விப்பட்டு பின்னர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு
 1790 ம் ஆண்டு தாவீது சுந்தரானந்தம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இவர்தான் திருநெல்வேலி பகுதியில் நாடார் குலத்தை சேர்ந்த முதல் சீர்திருத்தக் (பிராட்டஸ்டன்ட்)கிறிஸ்தவர் ஆவார்.(ஏற்கனவே நாடார்கள் மத்தியில் புனித சவேரியார் அவர்கள் மூலமாகவும்,
தத்துவ போதகர் தந்தை.இராபர்ட் டி நொபிலி அவர்கள் மூலமாகவும் புனித அருளானந்தர் என்றழைக்கப்படும் ஜான் டி பிரிட்டோ அவர்கள் மூலமாகவும் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி அவர்கள் மூலமாகவும் நாடார் சமூகத்தினர் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஏற்றிருந்தனர் காமநாயக்கன்பட்டி
கயத்தாறு 
வடக்கன்குளம் சொக்கன்குடியிருப்பு சோமநாத பேரி போன்றவை பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட முக்கியமான நாடார் கிராமங்கள் ஆகும்)

  தாவீது சுந்தரானந்தம் விசுவாசத்தில் பலப்பட்டு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாய் செயல்பட தன்னை அற்பணித்தார். சுவாட்ஸ் ஐயர் தான் செல்லும் இடமெல்லாம் தாவீது சுந்தரானந்தத்தை அழைத்து செல்வார்.

இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் குளோரிந்தா அம்மையார் அவர்களது நற்செய்திபணி மூலமாக அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்க. கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த ஒரு சபை உபதேசியாரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்குமாறு குளோரிந்தா அம்மையார் தஞ்சாவூரில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த சுவாட்ஸ் ஐயருக்கு கடிதம் எழுதினார்கள்.

ஆகவே சுவாட்ஸ் ஐயர் அவர்கள் 1796 ம் ஆண்டு திருநெல்வேலி பகுதிக்கு உபதேசியார் திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களோடு, தாவீது சுந்தரானந்தத்தையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்நிலையில் 1796 ம் ஆண்டு பாளையங்கோட்டையில் குளோரிந்தா அம்மையாரின் தலைமையில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த தாவீது சுந்தரானந்தம் தான் வளர்ந்த விஜயராமபுரத்திற்கு உறவினர்களை காண வந்தார்.

தாவீது சுந்தரானந்தம் நாகரிகமான ஆடை அணிந்து கம்பீரமாக நடந்து சென்றதை கண்ட அவரது உறவினர்கள் இவரை ஒரு அரசாங்க அதிகாரி என்று முதலில் நினைத்தனர். அப்போது மரித்து விட்டார் என்று கருதப்பட்டு வந்த நிலையில் தாவீது சுந்தரானந்தம் என்ற சின்னமுத்து வீடு திரும்பியது கண்டு அவருடைய உற்றார் உறவினர்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். 
தாவீது தன்னுடைய விபரத்தை சொன்னவுடன் அவருடைய தாய்மாமாவும் அத்தையும் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இவரை கட்டி தழுவிக்கொண்டார்கள். 

தாவீது சுந்தரானந்தம் அவருடைய சொந்தக்காரர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை முதலில் அறிவித்தார். இதனால் விஜயராம புரத்தில் இவருடைய நான்கு சொந்தகார குடும்பத்தினரை சேர்ந்த 18 பேர்கள் பதனீர் காலம் முடிந்த பின்னர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
 ஆகவே இவர்கள் ஆண்டவரை ஆராதிக்க பனை ஓலையினால் கூரை செய்யப்பட்ட ஆலயம் கட்டப்பட்டது. 
விஜயராம புரத்தில் குளோரிந்தா அம்மையார் மூலம் ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. சாத்தான்குளம் நகரை அடுத்த விஜயராமபுரத்திலிருந்து தான் கிறிஸ்தவ சமயம் திருநெல்வேலி நாடார் இன மக்கள் மத்தியில் பரவியது.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் 1797 ம் ஆண்டு அக்டோபர் மாதம்
 சண்முகபுரத்தை சேர்ந்த 40 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்கு சண்முக புரத்தில் பனை ஓலை மூலமாக கூரை அமைத்து ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. 

கிபி 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாதிப் படிநிலையில் குறைவாகக் கருதப்பட்ட நாடார் குலத்திலிருந்து நற்செய்திபணியை பறைசாற்ற கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட தாவீது சுந்தரானந்தம் சாத்தான் குளம் பகுதியில் உபதேசியாராக சுவாட்ஸ் ஐயர் மூலம் நியமிக்கப்பட்டார். இவர்தான் நாடார் குல மக்களின் முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவ உபதேசியார். 

தாவீது சுந்தரானந்தன் உபதேசியார் திருநெல்வேலியின் தென் கிழக்கு பகுதியான சாத்தான்குளம், திசையன் விளை, உவரி,
குலசேகர பட்டினம், தென்திருப்பேரை,
 ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் நற்செய்தியைப் அறிவித்தார். இதன் விளைவாக அநேகர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அனைத்து இடங்களிலும் சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

இந்நிலையில் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் நற்செய்தி பணியினால் நாடார் குலத்திலிருந்து அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் தங்கள் கடும் எதிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆகவே விஜயராமபுரம், சண்முகபுரம், சந்திரராயர் புரம், சாமிதோப்பு,
 தட்டார்மடம் போன்ற பல கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களை தீயிலிட்டு கொளுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் கிராமங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. 
அநேகர் கிறிஸ்தவர்களுக்கு விவசாய வேலைகள், 
பனை ஏறும் வேலைகள், கருப்புகட்டி வியாபாரங்கள் செய்வது எல்லாம் மறுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதம் இல்லாமற் போயிற்று. 
இந்நிலையில் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களில் இருந்து ஒதுங்கி இருந்து நிம்மதியாய் வாழ விரும்பினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் இருக்க ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி எவரெஸ்ட் என்பவரின் பண உதவியினால் சாத்தான் குளத்தில் இருந்து சில மைல் தொலைவில் இருந்த அடையல் கிராமத்தின் அருகே தரிசு நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, அங்கு சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் துன்பப்பட்ட கிறிஸ்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு என ஒரு சிறிய ஜெப ஆலயமும் அங்கே கட்டப்பட்டது. 
அங்கே குடிநீருக்கு என ஒரு கிணறும் தோண்டப்பட்டது. 1799 ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் விஜயராம புரம் மற்றும் சண்முக புரத்தை விட்டு வெளியேறி சுமார் 28 குடும்பங்கள் அந்த இடத்தில் வீடுகளை கட்டி குடியேறினார்கள். இது முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் ஊர் என்பதினால் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் விருப்பப்படி
 *முதலூர்* 
என்று அதற்கு பெயரிடப்பட்டது. 
இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு அடைக்கலப்பட்டணமாக இருந்தது.

1800 ல் முதலூரில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 200 ஆக உயர்ந்தது. 
தாவீது சுந்தரானந்தம் முதலூரின் உபதேசியாராக இருந்து நற்செய்திபணி செய்து வந்தார். 
அவருடைய சொல்லும், செயலும், ஜனங்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நாடார் குல மக்கள் அநேகர் மந்தை மந்தையாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். 

1801 ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேய படை வீரர்களுக்கும் கட்டப்போம்மன் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. சண்டையின் விளைவாகவும், இந்துமத பூசாரிகளின் தூண்டுதலின்படியும் கட்டப்பொம்மனின் படை வீரர்கள் முதலூர் வந்து கிறிஸ்தவர்களை தாக்கி அவர்கள் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். அநேகர் கொல்லப்பட்டார்கள். முதலூர் ஆலயமும் தீக்கிரையானது. இவற்றையெல்லாம் கிறிஸ்தவர்கள் சகித்துக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்துமத பூசாரிகள் பொது மக்கள் மீது கொடுத்த கெடுபிடிகள், நெருக்கடிகள், அநியாய வரி விதிப்புகள், கூலி கொடுக்காமல் வேலை வாங்குதல், கொடுமைகள், வேதனைகள் மத்தியிலும் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

1802 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1803 ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு இடையே 70 கிராமங்களை சேர்ந்த 5382 பேர்
 *குருவானவர் கற்பகம் சத்தியநாதன்* 
மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்
இது மாபெரும் மக்கள் திரலெழுப்புதல் ஆகும்.
இதற்கென பெரும் முயற்சி மேற்கொண்டவர் தாவீது சுந்தரானந்தர் அவர்களே அதில்.
90 சதவீதத்திற்கும் மேல் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதில் 66 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இக்கால கட்டத்தில் நாடார் இன மக்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதல் உண்யிற்று. இதில் தாவீது சுந்தரானந்தத்தின் பங்கும் செயல்பாடும் மிகஅதிகமாக இருந்தது. திருச்சபை வளர்ந்து பெருகியது.

 1802 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு என்று அநேக அடைக்கல பட்டணங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றில் முக்கியமானது சாயர்புரம், 
நாசரேத், 
சமாரியா(திசையன்விளை)
பெத்லகேம், 
எருசலேம்(பள்ளி பத்து)
கிறிஸ்டியாநகரம்(உடன்குடி)
ஆகியவை.

கனம். ரேனியஸ் ஐயர் அவர்கள் காலத்திலும் அநேக இடங்களில் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன
கடாட்சபுரம், 
அன்பின்நகரம், சுவிசேஷபுரம்
டோனா ஊர்,
நல்லூர் போன்ற 25 கிறிஸ்தவ குடியேற்ற கிராமங்கள்
 கனம் ரேனியஸ் ஐயர் அவர்கள் காலத்தில் உருவானவை.

இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களை எந்த அளவு ஒடுக்கினார்களோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். ஆயினும் இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களின் அடைக்கல பட்டணங்களுக்குள் 
புகுந்து 1803 ம் ஆண்டு மே மாதம் 22 ம் நாள் முதலூர் உட்பட பல கிறிஸ்தவ கிராமங்களில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களை தீக்கொளுத்தி, கிறிஸ்தவர்களின் வீடுகளை தீக்கிறையாக்கப்பட்டது. 
பல கிராமங்கள் சூறையாடப்பட்டது. பல இன்னல்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் பின்வாங்காமல் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். அவர்களை தாவீது சுந்தரானந்தம் தைரியப்படுத்தினார். ஆயினும் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது.

தாவீது சுந்தரானந்தத்தால் அநீதியை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களை பாதுகாக்கவும், தற்காத்துக்கொள்ளவும் *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை* என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் மல்யுத்தம் போன்ற கலைகளையும் கழியல் ஆட்ட கலையையும்
கற்றுக்கொடுத்தார். 
இதில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்த அநேக இளைஞர்கள் உபதேசியாருடன் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எங்கெங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்துமத பூசாரிகள் மூலம் தாக்கப்பட் டார்களோ அங்கு *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை* 
விரைந்து சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விட்டு திரும்பினார்கள். 
சபை ஊழியர் தாவீது சுந்தரனாரின் இத்தகைய செயலால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சில காலம் குறைந்தது. 
தாவீது சுந்தரானந்தம் அவர்களின் இந்த நடவடிக்கைககள் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டாத படியினால், இந்த செயல்பாடுகள் கிறிஸ்தவ மிஷனெரிகளால் மிகவும் விமர்சனத்திற்குள்ளானது.
SPCK மிஷனரி ஊழியத்தின் பொறுப்பு குருவாக அந்நேரம் நியமனம் பெற்று தென் தமிழகத்திற்கு வந்த மிஷினரி திங்கல் தொகை அவர்களிடம் தாவீது சுந்தரானந்தம் அவர்கள் மீது பொறாமை கொண்ட சிலர் அவரது தடிக்கொம்பு சேனை குறித்தும் அவரது வேகமான செயல்பாடுகள் குறித்தும் தவறாக கூறினார்கள் நிலைமையை விரிவாக ஆராய்ந்து நிதானமாக முடிவு எடுக்காமல் 
மிக அவசரமாக ரிங்கல் தோபே அவர்கள் முடிவெடுத்து தாவீது சுந்தரானந்தம் உபதேசியார் அவர்களை மிஷன் உபதேசியார் பொறுப்பிலிருந்து பணிநீக்கம் செய்து விட்டார்கள்.
மிஷனரி ரிங்கள்தௌபே அவர்கள் அவசரமாக எடுத்த இந்தப் பணிநீக்க முடிவு எதிரிகளுக்கு பேரானந்தத்தை கொடுத்ததோடு தாவீது சுந்தரானந்தத்தை அவர்கள் கொலை செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது

தாவீது சுந்தரானந்தத்தின் துணிச்சல், மக்களிடம் அவர் காட்டிய பரிவு, மனித நேயம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அவர் எடுத்த முயர்ச்சிகள் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முழு காரணமாயும் இருந்தது. 

முதலூரின் சுற்றுபுரத்தில் இருந்த இந்துமத பூசாரிகள் இந்த தடிக்கம்புக்காரர் கிறிஸ்தவ இளைஞர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள் 
மிஷன் உபதேசியார் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த தாவீது சுந்தரானந்தத்தை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டினார்கள். இந்நிலையில் பெத்லகேம் என்ற கிராமத்தில் நடைபெற இருந்த பண்டிகைக்கு தாவீது சுந்தரானந்தம் சென்றார். அப்பொழுது சில தந்திரக்காரர்களின் நயவஞ்சகமான சூழ்ச்சியினால்
தாவீது சுந்தரனந்தம் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது. 
இதை அறியாமல் உணவு உட்கொண்ட தாவீது சுந்தரானந்தம், 
1806 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் பெத்லகேம் என்ற கிராமத்தில் 34 ம் வயதில் அகால மரணமடைந்தார். தாவீது சுந்தரானந்தம் சாதிக்கொடுமை, பொறாமை மற்றும் சமய சகிப்பின்மை ஆகிய கொடுமைகளுக்கு பலியானார் 
தென் தமிழக சீர்திருத்த கிறிஸ்தவத்தின் முதல் இரத்த சாட்சியானார்

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் தான் கிறிஸ்தவத்தில் நாடார் குலத்தில் இருந்து கிறிஸ்துவுக்காய் வைராக்கியமாய் 
எழுந்த முதல் சீர்திருத்தக்கிறிஸ்தவர் மற்றும் முதல் உபதேசியார் ஆவார். இதைப்போல திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் *முதல் இரத்த சாட்சியும்* 
இவரே.
 
அப்படியே திருநெல்வேலி கிறிஸ்தவத்தில், *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை* என்ற அமைப்பை ஏற்படுத்தியவரும் இவரே.

 தாவீது சுந்தரானந்தம் அவர்கள்
 *முதலூரின் தந்தை* என்று அழைக்கப்படுகின்றார். இவருடைய நற்செய்தி பணியை நினைவுகூறும் படி தூத்துகுடி-நாசரேத் திருமன்டலத்தில்
 *தாவீது சுந்தரானந்தம் சபை மன்றம்* உருவாக்கப்பட்டு 80 திருச்சபைகளுக்கு அது பொறுப்பாக உள்ளது.
இவர் கற்றுக்கொடுத்த சிலம்பம்,
களியல் ஆட்டம்
ஆகியவை இன்றளவும்
முதலூரில் சிறப்பாக நடைபெறுகின்றது.
தாவீது சுந்தரானந்தம் அவர்களை நன்றியோடு நினைவு கூறுவோம்.

*பாமாலை 261 – எல்லாருக்கும் மா உன்னதர்**(All hail the power of Jesus name)*


*‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ என்னும் நாமம் ….. எழுதப்பட்டிருந்தது. வெளி 19:19*

*ஆண்டவராகியஇயேசுவின் ‘மகுடாபிஷேகக் கீதம்’ (Coronation Hymn) என்றழைக்கப்படும் பாடல்*

*பாடலுக்கான காரணம்*

 இப்பாடல் எழுதப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்தது, லண்டன் மாநகருக்கு இருபது மைல்களுக்குத் தெற்கில் சுண்ணாம்புப் பாறைகளின் உச்சியில் எழுப்பப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான சிலுவையாகும். இப்பாறைகள் ஷோர்ஹம் என்னும் ஒரு குக்கிராமத்தில் இருந்தன. சிலுவைக்கடியில் ஒரு சிறிய ஆலயமுமிருந்தது. இவ்வாலயத்தில் போதகராக வின்சென்ட் பெரோனே (Vincent Perronet) என்பவர் பல ஆண்டுகளாக உழைத்தார். 
அவரது புதல்வரான எட்வர்ட் பெரோனே (Edward Perronet) சிறுவனாக இருக்கும்போது ஆலயத்தின் முன்நின்று சிலுவையைக் கண்ணுற்று, இயேசுவின் தியாகத்தை உணர்ந்தார். இவ்வுணர்ச்சி அவர் ஆயுள் முழுவதும் அவரைத் தன் ஊழியத்தில் ஊக்குவித்ததென அவரே பலமுறை கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின் அவர் போதகராயிருக்கும்போது ஆங்கிலக் கவிகள் எழுதலானார். அப்போது அவர் இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தி எழுதிய ஒரு கவியே, ’எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது. 

*பாடலாசிரியர் குறித்த குறிப்பு*

இப்பாடலை எழுதிய எட்வர்ட் பெரோனே 1726 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை மெதடிஸ்டு சபையின் பிரதம அத்தியட்சர் என வேடிக்கையாக அழைக்கப்பட்டவர். ஏனெனில் மெதடிஸ்டு சபையை ஏற்படுத்திய வெஸ்லி சகோதரருக்கு அவரது தந்தை மிகுந்த ஆதரவளித்துவந்தார். பெரோனே 1749ம்ல் ஜான் வெஸ்லியுடன் சுற்றுப்பயணம் ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் சுற்றுப் பிரசங்கியாக உழைத்தார். பின்னர், ஆங்கிலத் திருச்சபையைத் தாக்கி உபந்நியாசங்கள் (அருட் செய்திகள்) செய்ததாலும், அதைத் தாக்கி ஒரு புத்தகம் எழுதியதாலும், வெஸ்லி சகோதரர்களுடன் அவருக்கிருந்த நட்பு 1771ல் அற்றுப்போயிற்று. அதன்பின், ஹண்டிங்டன் சீமாட்டி (The Countess of Huntingdon) அவரைத் தன் வீட்டுக் குருவாக (House Chaplain) வைத்துக்கொண்டார். ஆனால் அவர் திரும்பவும் ஆங்கிலச் திருச்சபையைத் தாக்கிக்கொண்டேயிருந்ததால், அந்த சீமாட்டியின் ஆதரவும் அவருக்கு இல்லாமல் போயிற்று ஆதலால் அவர் பல சபைகளில் மாறி மாறி ஊழியம் செய்து, இறுதியில் கந்தர்புரியிலுள்ள (Canterbury) ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) போதகராக அமர்ந்தார்.

*பாடல் ஆசிரியரின் குணநலன்கள்*

எட்வர்ட் பெரோனே ஒரு சிறந்த அருட்செய்தியாளர், சிறந்த கவிஞர். அவர் ஆங்கிலக் கவிகளடங்கிய மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இதிலுள்ள ஒரு கவியே ‘எல்லாருக்கும் மா உன்னதர்’ என்னும் பாடலாகும். 
இது முதல் முதலாக 1779ல் ‘Gospel Magazine’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில்
 *'Miles Lane’* என்னும் ராகத்துடன் வெளியிடப்பட்டது. இந்த ராகத்தையே நாம் தற்போது இப்பாடலுக்கு உபயோகிக்கிறோம்.  
இந்த ராகத்திற்கு இரட்சணியசேனை சபையார் ஓர் அழகிய பல்லவியையும் சேர்த்துப் பாடுகின்றனர். இப்பாடலுக்கு,
 *‘Diadem’, ‘Coronation’* என்னும் வேறு இரு ராகங்களும் உண்டு.
இப்பாடல் பரலோகக் கீதப் பாடலென்றும் அழைக்கப்படுகிறது.

*பாடலாசிரியரின் மறைவு*

எட்வர்ட் பெரோனே 1792 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2 ஆம் நாள் தமது 66வது வயதில் காலமானார். அவர் ஆங்கிலத் திருச்சபையைப் பலமாகத் தாக்கியிருந்தபோதிலும், கந்தர்புரி பேராலயத்தில் அவர அடக்கம் செய்யப்பட்டார்.
இது அவருக்கு அக்காலத்தில் இருந்த முக்கியத்துவத்தை காட்டுகிறது 
அவர் எழுதிய *எல்லாருக்கும் மா உன்னதர் என்ற இப்பாடல்* இன்று வரை எல்லா தேவாலயங்களிலும்
சிறப்பு நாட்களில் பாடலாக பாடப்படுகிறது

1. எல்லாருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க, இயேசுவே.

2. விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3. பிசாசு, பாவம் உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

(நாஞ்சில் ஜெனிக்ஸ் அவர்களது பதிவில் இருந்து மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது)

(J.ஜான் ஞானராஜ்)

*நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் திருநெல்வேலிக்கு வருகை தந்த 202 ஆம் ஆண்டு தினம் (07.07.1820 - 07.07.2022)*


*Rev.C.T.E.ரேனியஸ் ஐயரவர்கள் (1790-1838) அறிமுகப்படுத்திய, இன்றுவரை நடைமுறையிலுள்ள சபை ஒழுங்கு முறைகள்*

நெல்லை அப்போஸ்தலர் என புகழ்ந்து அழைக்கப்படும் கனம். ரேனியஸ் ஐயரவர்கள் 1814 - 1820 வரை சென்னையைச் சுற்றியுள்ள வட தமிழகத்திலும் 1820-1838 வரை 18 ஆண்டுகள் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகத்திலும் சிறப்பாக நற்செய்தி பணியாற்றினார்கள். கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் சுமார் 400 சபைகள், 150 பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டது. அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அநேக சபை ஒழுங்கு முறைகள் இன்றளவும் தென்தமிழக சபைகளில் நடைமுறையிலுள்ளது கீழ்க்கண்ட சபை ஒழுங்கு முறைகள் முதலில் அவரால் நிறுவப்பட்ட 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்களிலும் அதன்பின் அவரால் நிறுவப்பட்ட அனைத்து சபைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அவற்றை நாம் காண்போம்.

*1). அனு தினமும் காலை மாலை ஆராதனையும் அவற்றில் இறையருட் செய்தியும்*

திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் உள்ள சீர்திருத்த கிறிஸ்தவ சபைகளில் பெரும்பாலானவற்றில் அனுதினமும் காலை மாலை ஆராதனைகள் நடைபெறுகிறது அவற்றை தொடங்கிவைத்து நடைமுறைப்படுத்தியவர் ரேனியஸ் ஐயர் அவர்கள் ஆவார் ரேனியஸ் ஐயர் அவர்களால் சுமார் 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் முதலில் காலை மாலை ஆராதனை அனுதினமும் தொடங்கப்பட்டு பின்னர் அவை அனைத்து திருச்சபைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது இன்றளவும் காலை மாலை ஆராதனை நடைபெறுகிறது பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் மக்கள் பனையேறும் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் காலையில் பனையேறி பதநீர்
இறக்க செல்லும் முன்பாக அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிற தேவாலய ஆராதனைக்கு அனைவரும் வரவேண்டும் மாலையில் மாலை பதநீர் இறக்கும் பணி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிடும் முன்பாக மாலை 7 மணி அளவில் தேவாலயத்தில் நடைபெறும் இரவு ஆராதனைக்கு அனைவரும் வரவேண்டும் ஆராதனை முடிந்தபின் வீட்டிற்கு சாப்பிட வேண்டும்
காலை-மாலை ஆராதனைகளில் கட்டாயம் வேதபாடம் வாசிக்கப்பட வேண்டும் வாசிக்கப்பட்ட வேத பாடத்திலிருந்து இறையருட் செய்தி வழங்கப்பட வேண்டும் இதை சபையின் சட்ட திட்டமாக ரேனியஸ் ஐயர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் 200 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் இந்த முறை பின்பற்றப்படுகிறது

*2). ஓய்வுநாள் அரிசி காணிக்கை சேகரிப்பு திட்டம்*

1829 டிசம்பரில் துண்டுபிரசுரம் சங்க செலவுக்காக காணிக்கை சேகரிக்கும் பண்டிகை நடைபெற்றபோது பேணியே சால் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ மிஷன் கிராமமான அருளூர் கிராமத்தின் சபை ஊழியரான முத்தையன் உபதேசியாரின் மனைவி தாயாரருளாயி அம்மாள் அவர்கள் தாம் உணவு சமைக்கும்போது தினந்தோறும் எடுத்துவைத்த பிடி அரிசியை சேர்த்து வைத்து மூட்டையில் போட்டு அதை வண்டியில் ஏற்றி வந்து பண்டிகையின்போது படைத்தார்கள் அதுகுறித்து ரேனியஸ் ஐயர் அவர்கள் விபரம் கேட்டபோது தாயாரருளாயி அம்மாள் நாம் ஒவ்வொரு நாளும் உணவு சமைக்கும் முன்னர் எடுத்து வைத்த பிடி அரிசி என்பதை எடுத்துக் கூறினார்கள் அதை நன்கு கேட்ட இரேனியஸ் செய்கிறவர்கள் உபதேசியார் கூட்டத்தில் பிடி அரிசி காணிக்கை விபரத்தை அனைத்து உபதேசியார் களுக்கும் விபரமாக எடுத்துக் கூறி அனைத்து சபைகளிலும் அதை அறிவிக்கச் சொல்லி அனுதினமும் எடுத்து வைக்கும் பிடி அரிசி காணிக்கையை வாரந்தோறும் ஞாயிறு அன்று தேவாலயத்தில் படும்படியாக சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் இன்றளவும் தென்தமிழகத்தில் கிராம சபைகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது கல்லிடைக்குறிச்சி சபை வரலாறு குறித்து கல்லிடைக்குறிச்சியில் சபை ஊழியராக இருந்த திரு விக்டர் சதானந்தர் அவர்கள் தாம் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தமது தகப்பனாரும் கல்லிடைக்குறிச்சியில் மூன்று முறை சபை ஊழியராக இருந்ததால் அறிந்து கொண்ட ஒரு காரியத்தை பகிர்ந்துகொண்டார்கள் 1906-1910 வரை நடைபெற்ற கல்லிடைக்குறிச்சி தேவாலய கட்டுமான பணியின்போது சபை மக்கள் கொடுத்த அரிசி காணிக்கை பேருதவியாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள் சபை வளர்ச்சிக்கும் அரிசி காணிக்கை திட்டமாக இருந்தது

*3). ஒருநாள் வருமானக் கவர் காணிக்கை (லக்கோடா) படைத்தல்*

சபைகள் தங்களது வளர்ச்சிக்கு அயல் நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு நாள் வருமான கவர் காணிக்கை படைக்கும் திட்டத்தை சபைகளில் ரேனியஸ் ஐயரவர்கள் அறிமுகப்படுத்தினார்கள் இன்றளவும் இந்த கவர் காணிக்கை படைக்கும் வழக்கம் தென்தமிழக சபைகளில் நடைமுறையில் உள்ளது

*4). ஆசிரியர் பணிவுடன் கூடிய சபை ஊழியர்-Teacher Cum Catechist*

தென்தமிழக சபைகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த முறை ஆசிரியர் பணி உடன் கூடிய சபை ஊழியர் முறையாகும். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலந்து வாழும் கிராமங்களில் இம்முறை பெரிய வெற்றியை பெற்றது. தங்களது பிள்ளைகளை கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிய இந்து பெற்றோர்களுக்கு சபை ஊழியராக பணி செய்யும் பள்ளி ஆசிரியருடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது அவர்கள் அவரிடம் ஆலோசனை கேட்பது சபை ஊழியரும் இந்து மாணவ மாணவியரின் குடும்பங்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பது இந்து மாணவ மாணவியரை உயர்கல்விக்கு அனுப்புவதில் வழிகாட்டுவது என இந்து பெற்றோர்களோடு சபை ஊழியராக இருக்கும் ஆசிரியருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது இது அவர்கள் கிறிஸ்தவத்தை பிற்காலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

*5). சபை ஊழியர்களுக்கு மாதாந்திரக் கூட்டம்*

1828 முதல் சபை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டங்களை தலைமை இடமான பாளையங்கோட்டையில் வைத்து ரேனியஸ் ஐயர் அவர்கள் நடத்தினால் அதில் சபை ஊழியர்களுக்கு வேத அறிவு வளர வேத பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது சபை நிலவரம் சபை வளர்ச்சி கேட்டு அறியப்பட்டது பிரச்சினைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டது காலரா விஷக்காய்ச்சல் ஏற்படும் காலகட்டத்தில் எவ்வாறு சபை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற போதனை வழங்கப்பட்டது

*6). சங்க காணிக்கை முறை தொடக்கம்*

சபை உறுப்பினர்கள் அதற்கான சந்தா செலுத்தும் முறை தென் தமிழகத்தில் சங்க காணிக்கை முறை என்று அழைக்கப்படுகிறது தற்போதைய சங்க காணிக்கை முறைக்கு முன்னோடியாக அமைந்தது ரேனியஸ் ஐயரவர்களால் தொடங்கப்பட்ட சங்க காணிக்கை திட்டம்.
 நமக்கு மிஷனரிகளை அனுப்பி அவர்களை பண உதவியால் தாங்கும் CMS மிஷன் சங்கத்துக்கு உதவியாக ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு தொகையை (கால் பணம் - 23 காசு) காணிக்கையாகக் கொடுப்பதே இந்த முறை.

*7. கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் அமைத்தல்*

புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை ஊர் விலக்கம் செய்து கிராமத்தை விட்டு புறக்கணிப்பது அவர்களது வீடு மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற பல துன்பங்களை பிற மதத்தினர் செய்ததால் கிராமங்களில் சிறுபான்மையாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு என அந்த வட்டாரத்திலேயே தர்ம சகாய சங்கம் மூலம் அல்லது நன்கொடையாளர் மூலம் பெரிதானதோர் நிலம் வாங்கி அதில் தேவாலயம், பள்ளிக்கூடம் கட்டி குடிநீர் கிணறு அமைத்து அந்த இடத்தில் துன்ப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களை குடியேற்றம் செய்தல் என்ற திட்டமே கிறிஸ்தவ மிஷன் கிராமம் அமைப்புத் திட்டம்.
.1823 இல் முதல் கிறிஸ்தவ கிராமமாக பேய்குளம் வட்டாரத்தில் அருளூர் கிராமம் உருவாக்கப்பட்டது.
1837 இல் கடைசி கிறிஸ்தவ கிராமமாக சாத்தான்குளம் வட்டாரத்தில் சத்தியநகரம் கிராமம் உருவாக்கப்பட்டது.
தென் தமிழகத்தில் ரேனியஸ் ஐயரவர்களால் 25 கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

*8.) ஆலய பரிபாலன நிதி-LCF*

சபைகளின் தேவாலய செலவினங்களை சபை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் 1823 இல் ஆலய பரிபாலன நிதி-LCF ரேனியஸ் ஐயரவர்களால் தென்தமிழகத்தின் CMS சபைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவாலய விளக்குக்கான தீபத்திற்கு என எண்ணெய் செலவினங்கள், தேவாலய பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்கு என உழைத்து ஊதியம் பெறும் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு தொகையைக் கொடுப்பது அந்தத் தொகையை ஆலய பரிபாலன திதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதில் இருந்து தேவாலய செலவினங்கள் செய்யப்பட்டது.
 இம்முறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது

*9). சபை ஒழுங்கு கட்டுப்பாடு கடைபிடித்தல்*

,சபை ஒழுங்குக்கு புறம்பாக திருமணம் செய்தோர் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்தோர் ஆகியோர் சபை நீக்கம் செய்யப்பட்டனர்.
 சபை ஒழுங்கு சரியாக கடைபிடிகாபட்டது

*10,) திருமண்டல அளவில் ஆண்டுக்கு ஒரு முறை மாம்பழச் சங்க பண்டிகை*

திருமண்டல அளவில் சபை மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் பண்டிகையாக 09.07.1834 இல் மாம்பழச் சங்க பண்டிகை தொடங்கப்பட்டது. கைம்பெண் நல்வாழ்வு நிதிக்காக இப்பண்டிகை தொடங்கப்பட்ட போதும் அக்காலம் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழச் சங்க பண்டிகை என சபை மக்களால் அழைக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை 9 ஆம் நாளை ஒட்டி குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது கிறிஸ்தவர்கள் ஆவதற்கு முன்பு சென்று வந்த தொகை மற்ற கிறிஸ்தவர்கள் ஆன பின்பும் இந்த திருவிழாவிற்கு வண்டி கட்டி சென்று வந்தனர் இதை பாளையங்கோட்டையில் நேரில் கண்ட ரேனியஸ் அதே நாளில் இந்த பண்டிகை நாளை அமைப்பு கிறிஸ்தவர்கள் அனைவரும் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் இந்த பண்டிகையை கொண்டாட செய்தார் அதுமுதல் கிறிஸ்தவர்கள் திரள் கூட்டமாக மாட்டு வண்டிகளில் ஆண்டு தோறும் இப்பண்டிகைக்கு வந்து தங்கி ஆண்டவரை வழிபட்டு சென்றனர்.
.இப்பண்டிகையே பிற்காலங்களில் வட்டாரத் தலைமை இடங்களில் தவச உற்சவம் எனும் தோத்திரப் பண்டிகை தொடங்குவதற்கு மூல காரணமாக அமைந்தது.

*(J.ஜான் ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)*

*ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு*


ஸ்தோத்திர பண்டிகை தொடங்க முன்னோடியாக இருந்தது மாம்பழச்சங்கப் பண்டிகையாகும் ஆதலால் அதைக்குறித்து சுருக்கமாக பார்த்து விட்டு ஸ்தோத்திரப்பண்டிகையின் தொடக்கத்தைக் காண்போம்

*ஸ்தோத்திரப்பண்டிகை தொடங்க காரணமாக இருந்த "மாம்பழச்சங்கப் பண்டிகை"*

நெல்லை அப்போஸ்தலர் ரேனியஸ் ஐயரவர்களின் காலத்தில் (1820-1838) திருநெல்வேலி மாவட்டத்தில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனித் திருவிழா மிகப் பிரபலமான ஒன்றாக இருந்தது.
அந்த முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவிற்கு
அக்காலத்தில் பெருமளவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறி வந்த பிற்பட்ட சமூகத்தவர்கள் மாட்டு வண்டிகளில் கூட்டம்கூட்டமாக சென்று குரங்கணியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிற முத்துமாலை அம்மன் கோயிலை ஒட்டி இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற மரநிழலில் இளைப்பாறி தாங்கள் கொண்டு சென்ற ஆட்டுக்கிடாக்களை அடித்து சமையல் செய்து பெரும் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு குரங்கணி முத்துமாலை அம்மனை வழிபட்டு அதன்பின் திரும்பி வரும் வழியில் அனைவருக்கும் தெரியும்படி மீதமுள்ள ஆட்டுக்கடா இறைச்சித் துண்டுகளை உப்புக்கண்டம் போட்டு கொண்டு வருவது வழக்கம் ஆக இருந்தது. அக்காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாறிய பின்பும் குரங்கணி முத்துமாலையம்மன் திருவிழாவுக்கு பெருமளவில் திருச்சபை மக்கள் சென்று வந்தார்கள் அப்பொழுது இதைக் கண்ட Rev.ரேனியஸ் திருமண்டல அளவில் பெருவிழா ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்கள். அக்காலத்தில் காலரா, கொள்ளை காய்ச்சல் போன்றவற்றால் அநேக பகுதிகளில்
உபதேசிமார்கள் உபாத்தியாயர்கள் இள வயதிலேயே மரணமடைந்ததால் அவர்களது குடும்பங்கள் வறுமை நிலையை நோக்கி தள்ளப்பட்டது அவர்களுக்காக நிதி சேகரிப்பதற்கெனவும் திருநெல்வேலி திருமண்டலம் முழுவதிலுமுள்ள சபை மக்களுக்கு பெரியதொரு விழா எடுப்பதன் மூலமாக குரங்கணி முத்துமாலை அம்மன் திருவிழாவிற்கு கிறிஸ்தவர்கள் ஆனபின்பும் சென்றுவந்த சபை மக்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இருப்பதற்காகவும் *பண்டிகைப் பெருவிழா* ஒன்றை குரங்கணி முத்துமாலை அம்மன் திருவிழா நடைபெறுகிற அதேநாளில் 09.07.1834 அன்று பாளையங்கோட்டையில் நடதத திட்டமிட்டார்கள் அதற்காக பாளையங்கோட்டையில் தற்போது நூற்றாண்டு மண்டபம் இருக்கிற பகுதியில் பெரிதான அலங்காரப் பந்தல் போடப்பட்டது. பண்டிகைக் குறித்த அறிவிப்பு திருநெல்வேலி திருமண்டலம் எங்கும் சபைகளில் சபை மக்களுக்கு கூறப்பட்டது சபை மக்கள் அனைவரும் மாட்டு வண்டிகளில் உற்சாகமாக குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவுக்கு செல்வது போல பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருமண்டலத்தின் பெருவிழாவான மாம்பழச்சங்க பண்டிகைத் திருவிழாவுக்கு சென்று வந்தார்கள். 
தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இப்பண்டிகை ஜூலை 9 ஐ ஒட்டி வரும் புதன்கிழமை அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

 *ஸ்தோத்திரப்பண்டிகையின் தொடக்கம்*

திருநெல்வேலி திருமண்டலம் எஸ்.பி.ஜி 
மற்றும் சி. எம். எஸ் ஆகிய இரு மிஷனரி சங்கங்களின் மூலம் உருவானது முதன்முதலாக ஸ்தோத்திர பண்டிகை எஸ்.பி. ஜி மிஷனில் அக்காலத்தில் அதன் தலைமை இடமாக இருந்த நாசரேத்தில் 1884 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இப்பண்டிகை அங்கு நடைபெறவில்லை. முதன்முதலாக C.M.S
 மிஷனில் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிளில் தலைமை இடமாகிய சாட்சியாபுரத்தில் 1891 இல் சி.எம்.எஸ். தலைமை மிஷனரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட சர்ச் கவுன்சில் தலைவர் Rev.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களாலும் சாட்சியாபுரம் வட்டார தலைமை குருவானவரான Rev.சாமுவேல் பவுல் ஐயரவர்களாலும் தபச உற்சவப் பண்டிகை எனும் ஸ்தோத்திர பண்டிகை தொடங்கப்பட்டது 
அந்த பண்டிகை இன்றளவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது 
மதுரை - இராமநாதபுரம் திருமண்டலத்தில் திருமண்டலப் பண்டிகை ஆக மிக முக்கியத்துவம் பெற்றதாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  *பண்டிகை நாட்கள்*

சாட்சியாபுரத்தில் முதன்முதலாக இப்பண்டிகை தொடங்கப்பட்ட காலத்தில் நான்கு நாட்கள் இப்பண்டிகை நடத்தப்பட்டது.பின் மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இப்பண்டிகை மிக வெற்றிகரமாக நடைபெறுவதையும் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிளுக்கு உட்பட்ட அனைத்து சபை மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு இப்பண்டிகையில் பங்கு பெறுவதையும் கண்ட திருநெல்வேலி திருமண்டலத்தின் பிற சர்க்கிள்களின் தலைமைகுருமார்கள் தங்களுடைய சர்க்கிள்களின் தலைமை இடத்தில் ஸ்தோத்திர பண்டிகை என்றும் அறுப்பின் பண்டிகை என்றும் சேர்ப்பின் பண்டிகை என்றும் அழைக்கப்பட்ட இப்பண்டிகையை தொடங்கி கொண்டாட ஆரம்பித்தார்கள்.
 *கூட்டம்*
என திருநெல்வேலி திருமண்டல சபைமக்களால் இப்பண்டிகை பெரும்பான்மையோரால் அழைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலும் மூன்று நாட்கள் இப்பண்டிகை நடைபெறுகிறது.

*ஸ்தோத்திர பண்டிகை நடைபெறும் இடங்களும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளும் பின்வருமாறு*

1891 - சாட்சியாபுரம் (சிவகாசிசாட்சியாபுரம் சர்க்கிள்)
1892 - நல்லூர்
1893 - மெய்ஞானபுரம்
 1894 - டோனாவூர்
1894 -சுவிசேஷபுரம் 
1895 பாளையங்கோட்டை
 1896 - சுரண்டை 
1896 - பண்ணைவிளை  
1902 - இடையன்குளம் (செவல் சர்க்கிள்)
1919 - பொட்டல்பட்டி
1944 - குற்றாலம் (தென்காசி சர்க்கிள்)
1945 - கடையம் (அம்பாசமுத்திரம் சர்க்கிள்)
1966 - சீவலசமுத்திரம் (நல்லூர் சர்க்கிள்)
 1970 - கல்லிடைக்குறிச்சி (அம்பாசமுத்திரம் சர்க்கிள்)
1974 - அடைக்கலப்பட்டணம்(கோவிலூற்று சேகரம்)

*ஸ்தோத்திர பண்டிகை தொடங்குவதற்கான காரணங்கள்*

 பல கிராமங்களிலிருந்து பிற மதத்தினர் ஒன்றுகூடி மாட்டு வண்டிகளில் ஒன்றாக செல்வதும், ஆனி, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் கொடை விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வதும் குலதெய்வ கோயிலுக்கு பங்குனி உத்திரம் சிவராத்திரி போன்ற நாட்களில் குடும்ப சொக்காரர்கள் உடன்
( பங்காளிகள்) ஒன்றாக இணைந்து சென்று விழாக் கொண்டாடி வருவதும், செல்வதுமாக இருந்ததைக் கண்ட புதிய கிறிஸ்தவர்களும் தாங்களும் ஒன்றுகூடி அலங்காரப் பந்தலில் சபை குடும்பங்களாக சபை மக்களாக ஒருங்கிணைந்து ஆண்டவரை வழிபட வேண்டும் என்று விரும்பி வந்தார்கள். இவ்வாறான சபை மக்களின் விருப்பத்தை அந்தக்கால CMS மிஷனரிமார் அன்புடன் ஏற்றுக் கொண்டார்கள் இதுவே ஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்குவதற்கு மூலகாரணமாயிருந்தது.
இப்பண்டிகை ஆனி,ஆடி மாதங்களிலேயே நடைபெறுகிறது. குற்றாலம் பண்டிகை ஐப்பசி மாதம் நடைபெறுகிறது

*ஸ்தோத்திரப்பண்டிகை தொடங்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள்*

 ஸ்தோத்திர பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் மூலம்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிதிருவிழா, சங்கரன்கோவில் ஆடித்தபசுதிருவிழா,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா, 
பாபநாசம் காரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழா, தேரிகுடியிருப்பு (தேரிச்சாமி, கற்குவேல் அய்யனார் ) மேலபுதுக்குடி (அருச்சுனனை காத்த அய்யனார்)
உவரி சுயம்புலிங்கசாமி போன்ற பல இடங்களில் இருந்த குலதெய்வ கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு கிறிஸ்தவர்களான பின்பும் பழைய பழக்கத்தை கைவிடாமல் சென்று வந்த கிறிஸ்தவர்கள் இந்த ஸ்தோத்திரபண்டிகைகள் தொடங்கப்பட்ட பின்பு அந்த இடங்களுக்குச் செல்லாமல் வண்டி கட்டி உற்சாகமாக ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்ற சர்க்கிள் தலைமை இடங்களுக்குச் சென்று வந்தார்கள் குறிப்பாக சுரண்டை வட்டாரத்தை சார்ந்தவர்கள் சுரண்டையில் நடைபெற்ற ஸ்தோத்திர பண்டிகைக்கும், நல்லூர் ஆலங்குளம் வட்டாரத்தை சார்ந்தவர்கள் நல்லூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும்,
 டோனாவூர் வட்டாரத்தை சார்ந்தவர்கள் டோனாவூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும், செவல்,இடையன்குளம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இடையங்குளம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் 
தென்காசி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குற்றாலம் ஸ்தோத்திரப் பண்டிகைகும்
அம்பாசமுத்திரம் கடையம் வட்டாரச் சபையார் கடையம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் சுவிசேஷபுரம் வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் சுவிசேஷபுரம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் மாட்டு வண்டிகள் மூலம் சென்று அந்த இடங்களில்
 மூன்று நாட்கள் தங்கியிருந்து அலங்கார பந்தலில் ஆண்டவரை வழிபட்டு திரும்பி வந்தார்கள் அதன் மூலமாக அவர்களுக்குள் ஐக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது
தற்காலத்தில் மாட்டு வண்டிகளில் இப்பண்டிகைக்காக பயணம் செய்வது குறைந்துள்ளது
பேருந்து மூலமாக,
வேன் மூலமாக, கார் மூலமாக, இருசக்கர வாகனங்கள் மூலமாக குடும்பம் குடும்பமாக ஸ்தோத்திர பண்டிகைகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆண்டவருக்கு நன்றி காணிக்கை செலுத்தி இறைவழிபாடு செய்து வருகின்றனர்.

      *பண்டிகைக்காக ஆயத்தங்கள்*

இந்த பண்டிகைக்காக பல மாதங்களுக்கு முன்பாகவே சபை மக்கள் பணம் சேர்த்து வருவது,
 உண்டியல் மூலம் பணம் சேகரிப்பது எனப் பல காரியங்கள் பழங்கால முதல் இன்றளவும் தொடர்கிறது. ஸ்தோத்திர பண்டிகைகள் சபைகளுக்குள்ளும்,
 சபை மக்களுக்குள்ளும் சபை ஐக்கியத்தை ஏற்படுத்தி இறைமக்களை ஒன்று கூட்டுகிறது.

         *ஸ்தோத்திர பண்டிகை நிகழ்வுகள்*

பொதுவாக ஸ்தோத்திர பண்டிகைகளில் முதலாம் நாள் ஆயத்த பவனி, ஆயத்த கொடியேற்றம், ஆயத்தஆராதனை கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. இரண்டாம், மூன்றாம் நாட்களில் திருவிருந்து ஆராதனை,
 வருடாந்திர கூட்டம், பண்டிகை ஆராதனை போன்றவையும்
விளையாட்டு போட்டிகள்,
 மன்றாட்டு ஜெபம்,
 சிறுவர்களுக்கு வாலிபர்களுக்கு ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு ஜெபக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன இரண்டாம் மூன்றாம் நாட்களின் இரவுகளில் பஜனை பிரசங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
அனைத்து நிகழ்வுகளிலும் கொடுக்கப்படுகிற ஆண்டவருடைய அருட்செய்தி சபை மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆண்டவருடைய திருச்சமுகத்திற்கு நேராக கொண்டு செல்கிறது

         *பண்டிகைக்கால கடைகள்*

சிறுபிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில்
இராட்டினங்கள்,
 மிட்டாய் கடைகள்,
 வளையல் கடைகள்,
விளையாட்டு பொருட்களுக்கான கடைகள் ,
குடும்பத்திற்கு தேவையான உணவு உபயோக பொருட்களுக்கான கடைகள்,
Refresh செய்வதற்காக தேனீர் கடைகள்,
வாய்க்கு ருசியான சிற்றுண்டி மற்றும் உணவு அளிக்கும் கடைகள் என பலதரப்பட்ட மக்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கடைகள் என ஸ்தோத்திர பண்டிகைகள் அதை ஒட்டிய நிகழ்வுகள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமைகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

*இறைமக்கள் வாழ்வில் ஸ்தோத்திர பண்டிகைகள்*

1.இறைமக்களை ஒன்று கூட்டுகிறது 

2.இறைமக்களை ஆண்டவருக்கு நேராகக் கொண்டு செல்கிறது 

3.இறை மக்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது

(ஜா.ஜான் ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)

*தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலங்களில் தென்னிந்திய திருச்சபை திருவிருந்து வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல்களை அறிமுகப்படுத்திய முன்னோடி*


 தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலங்களில் தென்னிந்திய திருச்சபை திருவிருந்து வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல்கள்ஆகப் பாடப்பட்டு வருகிறது இதற்கான முன் முயற்சிகளை முன்னெடுத்து பாடல்களை எழுதி அதற்கு மெட்டு எனும் இசையமைத்து சிறப்பாக வழங்கியவர் மூத்த் குருவானவர் ஆன *அருள்திரு. மு.சா.ஜேசுதாசன் ஐயரவர்கள் ஆவார்கள்* 
அவர்களது வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்து கொள்வது நமது ஆவிக்குரிய வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் அவர்களது தென்னிந்திய திருச்சபை வழிபாட்டு முறைமை தமிழிசை பாடல் வழி திருவிருந்து ஆராதனை மேலே காணும் யூ ட்யூப் லிங்க் மூலம் கற்றறிந்து கொள்ளலாம்

*பெயர்* - மு.சாமுவேல் ஏசுதாசன்
M.S.J. என அனைவராலும் புகழ்ந்து அழைக்கப்பட்ட Rev.M.S. ஜேசுதாசன்

*பிறப்பும்குடும்பமும்*

 பிறந்தநாள் -06.08.1917
 தந்தை,தாயார்-முத்தையா உபதேசியார் - தேவகிருபை பொன்னம்மாள் 

*கல்வி*

• தொடக்கக் கல்வி பசுவந்தனை CMS தொடக்கப் பள்ளி
• நடுநிலைக் கல்வி பாளையங்கோட்டை CMS நடுநிலைப் பள்ளி
• உயர்நிலைக் கல்வி தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பயிற்சி பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி (1937-1939)

*இசைத்திறமை*

 ஆர்மோனியம், வயலின், மவுத் ஆர்கன் 

*ஆசிரியர் பணி* தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப் பள்ளி

*திருமணம்*

*மனைவி*

 Rev.தா.ஜெபமணி டேவிட் ஐயரவர்களின் மகளான சுகிர்தம் அம்மாள் 

*குருத்துவக் கல்வி*-

நாசரேத் திருமறையூர் –(1945-49)

*உதவி குரு* 

12.06.1949 நாசரேத் தூய யோவான் தேவாலயம்,

*குருவானவராக*

 05. 03.1950 அன்று நாசரேத் தூய. யோவான் தேவாலயம்,

*பணி செய்த இடங்கள்*

நாசரேத்
 வாகைக்குளம், உதவி குரு,

பில்லி கிரகாம் பின்தொடர் பணி,
Youth For Christ Work, கடையனோடை, 
TDCM செயலாளர் மற்றும் Diocesan Youth Work செயலாளர், கிறிஸ்டியாநகரம் சர்க்கிள் சேர்மன், மெஞ்ஞானபுரம் சர்க்கிள் சேர்மன், பாளையங்கோட்டை தூய. திரித்துவ பேராலயம் மற்றும் பேராயர் ஆணையாளராகவும் பணி செய்தார்கள். 

*இசை ஆர்வம்*

• கர்நாடக இசை மீது அதிக ஆர்வம் கொண்ட ஐயரவர்கள் தமது ஐந்து பெண் மக்களுக்கும் கர்நாடக இசை ராகங்களில் பெயர்கள் சூட்டினார்கள்

• தமிழ்இசை பாடல்வழி திருவிருந்து ஆராதனை முறைமையை ஏற்படுத்தியவர்கள்.

 *1983. இல் பணி நிறைவு*

*இதர திறமைகள்*

• நீரூற்று பார்க்கிற சிறப்பு திறமை 
• எழுத்துத் திறன் - ஆசிரியர் சிறுவர் வாழ்வு சிறுவர்களுக்கான மாத இதழை 
• நறுமணம் மாத இதழ் நறுமணம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தது 
*பரம அழைப்பு* -22.01.1992 

நன்றி
@Tinnevelly Christian Historical Society
(ஜா.ஜான் ஞானராஜ்)

(கனம்.M.S. ஜேசுதாசன் ஐயரவர்கள் எனது தாயாருக்கு ஒன்று விட்ட மாமா ஆவார் எனது அம்மாவிற்கு பெரிய பாட்டியம்மா மகன்)