Sunday 22 October 2017

பாளையங்கோட்டை சாரா டக்கர்

பாளையங்கோட்டை சாரா டக்கர்
பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால் அங்கு சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர் செக்கண்டரி ஸ்கூல்,சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல்,...என்ற பலகைகளைக் காணலாம்
உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..
இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி, அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..
அவளால் ஒன்று தான் செய்ய முடியும்
ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்
அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது.
.ஒரு நாள் ஒரு தென்னிந்திய மிஷனரி அந்த ஆலயத்தில் பேசினார்.
.தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலே கோயிலுக்கு
பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..
பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..
நொறுங்கிய மனதுடன் வீட்டுக்கு வந்தாள் சாரா..
அவளுக்கு 20 வயது இருக்கலாம்..
அவளின் அப்பாவின் பெயர் டக்கர்..
அவள் ஆண்டவரிடம் சொன்னாள்..
ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது என்று
ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது ..
அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும் அவளுக்கு ஒன்று தோன்றியது..
அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.
அவள் உறவினரிடம் இது பற்றி சொன்னாள்..
அவள் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை..
அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்..
இரு ஆடைகளுக்கு மேல் அவள் வாங்கவில்லை..
ஒரு நாள் அந்த மிஷனரிக்குப் பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....
அதில் உருவாகியது தான்
சாரா டக்கர் ஸ்தாபனங்கள
இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய பள்ளியாக கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..
அவள் இந்தியாவுக்கு வரவில்லை.
திருநெல்வேலிக்கும் வரவில்லை
அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது
"நான் சாரா டக்கர் மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..
அவள் தன்னால் இயன்றதை செய்தார் அந்த இளம் பெண் சாரா
இது தான் பாளையங்கோட்டை சாராக்கர் கல்வி நிறுவனம் தோன்றிய வரலாறு
வரலாற்றில்தான் எத்தனை ஈரமுள்ள இதயங்கள் வாழ்ந்துள்ளன

Source

No comments:

Post a Comment