Sunday, 16 September 2018

Holy Communion, Holy Eucharist facts in tamil

ஆண்டவர் பாடுபட்டு மரணமடைந்த பெரியவெள்ளிக்கு முந்தின நாளான பெரியவியாழனன்று இரவில் தம் சீடரோடு உட்கொண்ட ஐக்கியவிருந்து Holy Communion, Holy Eucharist -வடமொழியில் இரவு போஜனம் - இராப்போஜனம்
தமிழில் நாம் பயன்படுத்தும் ஹென்றிபவர் வேதாகம மொழிபெயர்ப்பு 1870 - 1871 காலத்தைய மொழிபெயர்ப்பு ஆகும் அக்காலத்து தமிழ்நடையில் ஏராளமான வடமொழியான சமஸ்கிருத சொற்கள் கலந்திருந்தன அப்படி கலந்து பேசுவதையே அக்கால பண்டிதர்கள் பெருமையாக சரியானதெனக் கருதினர்.
ஆனால் 1921 க்குப்பின் தமிழறிஞர்.மறைமலையடிகளார் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் வலுப்பெற்றபின் வடசொல்லை தமிழில் கலந்து பயன்படுத்துவது குறைந்து வந்தது.
நாமும் பெந்தேகோஸ்தே சபையினரும்  1870-71 பவர் மொழிபெயர்ப்பு வேதாகமத்தைப் பயன்படுத்துவதால் இராப்போஜனம் என்ற வடமொழிசமஸ்கிருத சொல்லையே பயன்படுத்துவதோடு அதையே சரியானதென அநேகர் வாதிடுவர். இடைக்காலத்தில் இதை பரி.நற்கருணை  என்றனர்ர
நன்மை+கருணை=நற்கருணை என்ற சொல் இராப்போஜனத்திற்கு அனைத்து சபைகளிலும் பயன்படுத்தப்பட்டது
இன்றளவும்
ஆல்டர் திருமேசை
நற்கருணை பீடம் எனவும்
திவ்யநற்கருணைஆசீர்
நற்கருணை நாதர்
ஆகிய சொற்கள்
நற்ருணை நாதனே பாடல்
கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்
தூய.தமிழ்மொழியாக்கம் நடைமுறைக்கு வந்தபிறகு
கத்தோலிக்க கிறிஸ்தவர்
திருப்பலி
கூட்டுத்திருப்பலி
ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி
என நற்கருணையை பெயர்மாற்றம் செய்துகொண்டனர்
ஆண்டவரது பாடுமரணத்தில் ரத்தமும் சதையும் ஒன்றாகிவிட்டது என்ற அடிப்படையில் சிறப்புநாட்களில்
அப்பத்தை திராட்சை ரசத்தில் முக்கி வழங்கியும் இதரநாட்களில் அப்பம் மட்டும் வழங்கும் முறையையும் நீண்டபலநூற்றாண்டுகளாகக் கத்தோலிக்க சபை கடைப்பிடித்து வந்தனர் போதகர்கள் மட்டும் அப்பம் சாப்பிட்டு திராட்சை ரசம் அருந்தி வந்தனர் சபையார் தங்களுக்கும் அவ்வாறு வழங்க சபையார் பல நூற்றாண்டுகளாக் கேட்டு வந்தனர்.
மார்ட்டின்லுத்தர் காலத்திலும் நற்கருணை முறையில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை
அவருக்குப்பின் லுத்தரன் சபைகளுக்கு தலைமைதாங்கிய மெலங்டன் நற்கருணை முறையில் நடைமுறையை மாற்றினார்.
புராட்டஸ்டண்ட் திருச்சபைகளும் பாதி பெந்தகோஸ்து சபைகளும் திருவிருந்து என்ற தூய தமிழ்நடையை சரியாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் இராப்போஜனம் என்ற வடசொல்லை திருமணம் என்ற தூய சிறப்பான சொல் இருக்கையில் விவாகம் மெய்விவாகம்
எனும் சொற்களைத் தவறாக பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தி அதுவே சரியென வாதிட்டு வருகின்றனர். மூன்று பாரம்பரிய சபைகளில் திருவிருந்து குறித்த சித்தாந்தம்
1.திருவிருந்தில்/திருப்பலியில் பரிமாறப்படும் அப்பமும் ரசமும்
இயேசப்பாவின் உடலாக ரத்தமாக மாறிவிடுகிறது
*Transubstantiated*(their substance having been changed)
என்பது கத்தோலிக்கத் திருச்சபை பாரம்பரியம்
2.திருவிருந்தில் பரிமாறப்படும் அப்பமும் ரசமும் பாடுபட்ட
கிறிஸ்துவின் சரீரத்திற்கும் இரத்தத்திற்குமான அடையாளம்
*Symbol*
என்பது
ஆங்கிலிக்க சபைகளின் பாரம்பரியம்
3.திருவிருந்தில் பரிமாறப்படும் அப்பத்திலும் ரசத்திலும் தேவபிரசன்னம் உள்ளது என்ற மார்ட்டின் லுத்தரின் கோட்பாடே
*God's Presence*
லுத்தரன் சபைகளின் பாரம்பரியம்.

No comments:

Post a Comment