பழங்காலத்தில் ஞானப்பாட்டு என்னனழைக்கப்பட்டு தற்காலத்தில் பாமாலை என்றழைக்கப்படும் மேற்கத்திய பாடல்கள் ஆங்கிலம், ஜெர்மானியம் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த ஐரோப்பிய மிஷனரிகளால் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவை.லுத்தரன் சபைகளில் பெரும்பாலும் தொடக்கப்பாடலாகப் பாடப்படும் "உம்மைத் துதிக்கிறோம்"பாடல் ஜெர்மானியத்திலிருந்து ஆங்கிலத்திற்கும் பின் தமிழுக்கும் மொழியாக்கம்செய்யப்பட்டது.நான்காம் நூற்றாண்டு லத்தீன் பாடலான "தேவனே உம்மைத் துதிக்கிறோம்"
எட்டாம் நூற்றாண்டு லத்தீன் பாடலான "ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே"ஆகிய இரண்டு பாடல்களும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை பாடலான இவையிரண்டும் புராட்டஸ்டண்டு கிறிஸ்தவ சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.
"சபையின் அஸ்திபாரம் நல்மீட்பர் கிறிஸ்துவே" என்ற புகழ்மிக்கப் பாடல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.
SPG மிஷனரியும் பன்மொழி பண்டிதருமான
பேராயர்.மகாகனம் இராபர்ட் கால்டுவெல் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதேபோன்று CMS மிஷனரியும் டோனாவூர் வட்டார தலைமை மிஷனரியுமான கனம்.தாமஸ் உவாக்கர் அவர்களாலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 1924 ல் CMS SPG மிஷன் சபைகள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்புவரை SPG சபைகள் பேராயர்.மகாகனம்.கால்டுவெல் அவர்களது மொழிபெயர்ப்பையும்
CMS சபைகள் டோனாவூர் தலைமை மிஷனரி கனம்.தாமஸ் உவாக்கர் அவர்களது மொழிபெயர்ப்பையும் பாடி வந்தார்கள்.
1924 ல் இருமிஷனரி நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டபின்பு கனம்.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களது மொழிபெயர்ப்பு பாடல் ஒருங்கிணைந்த திருநெல்வேலி திருமண்டலம் முழுவதும் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஞானப்பாட்டு எனும் பாமாலைப்பாடல்களை வெளியிட்டு வந்த CLS எனும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் CMS மிஷனரி கனம்.தாமஸ் உவாக்கரது மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டு அதையே இன்றளவும் பதிப்பித்து வெளியிட்டு வருகிறது.
கனம்.தாமஸ் உவாக்கர் பண்ணைவிளையில் பின் நீண்ட காலமாக டோனாவூரிலும் மிஷனரிப்பணியும் குருத்துவப்பணியும் செய்தவர்
CMS சங்கத்தின் அடிப்படைக்கொள்கையான சடங்காச்சாரங்களற்ற சுத்த சுவிசேஷத்தைப் பரப்புவதில் மிகுந்த ஆர்வமுடையவர்
CMS வட்டாரத் தலைமையிடமான பண்ணைவிளையில் சுவிசேஷப்பணியும் சமூகப்பணியும் ஆற்றி வந்த எமி கார்மைக்கேல் அம்மையாரை CMS ன் மற்றொரு தலைமையிடமான டோனாவூருக்கு சுவிசேஷப் பணியாற்ற அழைத்து வந்து நட்சத்திரக்கூட்டம் என்ற Dohnavur Fellowship அமைய உதவிகரமாக உறுதுணையாக இருந்தவர் உவாக்கர் ஐயரவர்கள். கனம்.ஐயரவர்கள் வடபகுதிக்கு மிஷனரி சுற்றுப்பயணமாக மிஷனரி பணியாற்றச் சென்றிருந்த வேளையில் அங்கு திடீரென மரணமடைந்தார்கள்.
கனம்.தாமஸ் உவாக்கரும் கனம்.கார் மிஷனரியவர்களும் மிகநெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து திருநெல்வேலி திருமண்டலமெங்கும் மிஷனரி சுற்றுப்பயணம் செய்து நற்செய்திப்பணியாற்றி சபைகளைப் பலப்படுத்தி வந்தனர். இப்பணியில் மிஷனரி Rev.தாமஸ் உவாக்கரும் மிஷனரி Rev.E.S.கார் ஐயரவர்களும் தனித்திறமை பெற்றிருந்ததாகவும் இருவரும் பாலியர்சங்க ஊழியத்தை ஊக்கப்படுத்தியதாகவும்
இருவரும் "நற்போதகம்" மாத இதழ் ஆசிரியராகச் சிறப்புறப் பணிசெய்ததாகவும்
இருவரும் திருமண்டல பள்ளிகளுக்கானசட்ட விதிகளை வகுப்பதில் முக்கியஸ்தர்களாகப் பணிசெய்ததையும் திருமண்டல இருநூறாண்டு வரலாறு நூல்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கனம்.தாமஸ் உவாக்கர் ஐயரவர்களையும்
கனம்.கார் மிஷனரி ஐயரவர்களையும் நன்றியோடு நினைவுகூருவோம்.
Sunday, 16 September 2018
*ஞானப்பாட்டு எனப்படும் பாமாலைப்பாடல்களும் அதன் மொழிபெயர்ப்புகளும்*
Subscribe to:
Post Comments (Atom)
Tiang N1Ti Bike (Tiang-N1Ti Bike) - ITNICART
ReplyDeleteThe Tiang-N1Ti Bike has a very microtouch titanium trim as seen on tv solid design and it has microtouch titanium trim reviews a very high performance performance that is titanium wedding bands easy to maintain. microtouch trimmer Its how strong is titanium shape is slightly