1) *நோவா பேழை* - *1977 Ron Wyatt*- துருக்கி தேசம்
வேதாகமம்
இந்த கப்பல் Urartu (Ararat), தற்போதைய துருக்கியில் இருப்பதாக நமக்கு
தெளிவுபடுத்துகிறது. இந்த ஆதாரம் உண்மை என்று உலகத்திற்கு வெளிச்சமாகியது.
துருக்கி அராசாங்கமும் இதனை ஏற்றுக்கொண்டு நோவா பூங்கா என்று அதை
அறிவித்துள்ளது.
ஆதியாகமம் 8:4 - ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று
இதே மலையில் தான் நோவா கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.6000years.org/frame.php?page=noahs_ark
2) *சோதோம் & கொமோரா (Sodom & Gomorrah (in Israel)*- இஸ்ரேல் தேசம்
ஆதியாகமம்
19: 24. அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே
வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,*
II
பேதுரு 2:6. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக்
கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே
அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
இந்த அக்கினியும் கந்தகமும் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
96
- 98 வரை சல்பர் அதில் அடங்கி இருக்கும். இந்த இடத்திற்கும் யாரும்
பாதுகாப்பிலாமல் போக முடியாது. போனால் உடல் முழுவதும் வெந்து போகும்.
அதனால் அரசாங்கள் இந்த இடத்தை மூடி வைத்துள்ளது.
http://www.6000years.org/frame.php?page=sodom
wyattmuseum.com
www.ronwyatt.com
www.throneofgod.com
www.biblediscoveries.com
www.biblediscoveries.com
www.arkdiscovery.com
3) *மோசே கடந்து போன சிவந்த கடல் பிரதேசம்* யாத்திராகமம் 14ம் அதிகாரம் முழுவதும்...
யாத்திராகமம்
14:16. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி,
சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின்
நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
21.
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர்
இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை
வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
27.
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்;
விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு
எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
28.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக
சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும்
மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை
இந்த வேத வசனங்களும் நிரூபிக்கப்பட்டு விட்டன...
மோசே
என்ற ஓர் தேவன் மனிதன் மூலமாக எகிப்து அடிமைத்தனத்தில் இருந்து
இஸ்ரேவேலர்களை அழைத்து சென்ற உண்மை சரித்திரம் உண்மையாகியுள்ளது இந்த
சரித்திரம் 3500 வருடங்களுக்கு முன் நடந்ததாக நமக்கு தெரியும். இந்த
வழியையும் கண்டுபிடித்துள்ளார்கள். வேதாகமம் குறிபிட்டுள்ள பகுதியில் உள்ள
கடல் பிரதேசத்தின் அடியில் ஓர் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை கண்டு
பிடித்துள்ளார்கள். எகிப்த்திய ராணுவ அடையாளங்களையும் கடலுக்கு அடியில்
கண்டு பிடித்துள்ளார்கள். இதனை பற்றி பல ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தலகளை பாருங்கள்.. மேலும் தகவல்கள் கிடைக்கும்...
redseacrossingtruth
redseacrossing
wyattmuseum.com
www.ronwyatt.com
www.throneofgod.com
www.biblediscoveries.com
www.biblediscoveries.com
www.arkdiscovery.com/red_sea_crossing.htm
4)
*சினாய் மலை (Mt. Sinai (aka Mt. Nebo) - இஸ்ரேவேலர்களை வழிநடத்தின இயேசு
கிறிஸ்து அவர்களை வழிநடத்தின மோசேவுக்கு சீனாய் மலையில் வெளிபடுத்தினார்.*
யாத்திராகமம்
19:18 - கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது
முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல
எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
இந்த சீனாய் மலை இன்று சூடாய் இருப்பதை உள்ளதை நீங்கள் அறியலாம். மலை மேல்பகுதி இன்னமும் தீயில் எரிந்தது போலத்தான் காணப்படுகிறது.
www.throneofgod.com
mount-sinai-and-the-apostle-paul
www.arkdiscovery.com/mtsinaipax.htm
www.arkdiscovery.com/mt__sinai_found.htm
www.arkdiscovery.com/mt_sinai_found_part_2.htm
5) *டைனோசரஸ் காலத்தில் மனிதன் - யோபு 40*
19ம்
நூற்றாண்டில் மனிதனுக்கு கிடைத்த பெரிய புதைபொருளில் இந்த மிருகமும்
உண்டு. இந்த மிருகம் மனிதன் வாழ்ந்த காலத்தில் இருந்ததை யோபுவின் அதிகாரம்
நமக்கு விளக்கி உள்ளது. இது 3500 வருடங்களுக்கு முன் நடந்ததாகும். இதனை
வெளிப்படுத்தியதும் பரிசுத்த வேதாகமமே..
createddinos.com
discoverynews.us
creationevidence.org
answersingenesis.org
6) *இஸ்ரேல் தேசம் மீண்டும் மலர்ந்தது*- *1948* - *எசேக்கியல் 37:*
*சுமார் 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறியது*
12.
ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது
என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான்
உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து
வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
13.
என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள்
பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று
அறிந்துகொள்வீர்கள்.
14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்;
நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது
நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்
என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
70ம்
ஆண்டில் சிதறடிக்கப்பட்ட யூத ஜனம் பல்வேறு அதிகாரங்களால் உலகம் முழுவதும்
கொடுமைபடுத்தப்பட்டது. அவர்களின் நிலத்தை மீட்டெடுத்து இந்த வேத வசனம்
உயிருடன் இருப்பதை உறுதி செய்தது. இதன் பிறகு தான் இயேசு கிறிஸ்துவின்
வருகைக்குரிய அடையாளங்கள் வேகமாய் நிறைவேறி வருகின்றன.
7) *யோசேப்பு நாணயம் கண்டுபிடிப்பு - 2009 - எகிப்து தேசம்*
செப்டம்பர் 2009ல் எகிப்தில் ஆராய்ச்சியாளர்களால் தீர்க்கதரிசி யோசேப்பின் முகமும், பெயரும் கொண்ட நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
8) *Nebo-Sarsekim tablet- தலைமை அதிகாரி* - எரேமியா 39:3 -
3.
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர்,
சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக்
என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும்
உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
And all the princes
of the king of Babylon came in, and sat in the middle gate, even
Nergalsharezer, Samgarnebo, Sarsechim, Rabsaris, Nergalsharezer, Rabmag,
with all the residue of the princes of the king of Babylon.
இந்த
வசனத்தின் ஆண்டு கி.மு. 587 ஆகும். நேபுகாத்நேசர் எருசலேமை பிடித்த
வருடமாக 587 உள்ளது. இந்த tablet எருசலேம் வீழ்வதற்கு 10 வருடங்களுக்கு
முன் எழுதப்பட்டது ஆகும். ஆக எரேமியாவின் வாழ்க்கையும், நேபுகாத்நேசரின்
வாழ்க்கையும், சரித்தரத்தையும், பரிசுத்த வேதாகமத்தின் உறுதியையும்
உண்மையாக்கியது ஜூன் 2007.
9) *பரிசுத்தப் பெட்டி - உடன்படிக்கை பெட்டி... 1978க்கு பிறகு... கொல்கொதா மலை*
II
நாளாகமம் 35:3. இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப்
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத்
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே
வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும்
ஊழியஞ்செய்து,
இந்த பரிசுத்த பெட்டியை குறித்து நீங்கள் சபைகளில்
பேசி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த பெட்டி இருந்த இருக்கும் இடம்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா?
இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி...
வசனம் 19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
அதாவது....
கி மு 621ம் ஆண்டு எருசலேம் தேவாலயம் இடிக்கபடுவதர்க்கு 35 வருடங்களுக்கு
முன் உள்ளது... பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுக்கையிட்ட போது உள்ளே
இருந்து எந்த ஓர் பொருளும் வெளியே செல்லாமல் பார்த்து கொண்டார்கள். இதனால்
நிச்சயம் இந்த பெட்டி சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே
இருந்திருக்க வேண்டும். அல்லது அதை அருகில் எங்காவது மறைத்து
வைத்திருக்கவும் வாய்புகள் உண்டு என்ற கோணத்தில் எருசலேமை ஆராய்ந்தார்கள்.
வேதாமத்தின் அடிப்படையில் எதிர்பார்த்தது போல கொல்கதா மலையின் அடியில் இந்த
உடன்படிக்கை பெட்டியை கண்டு பிடித்தார்கள்.
இந்த
மலையின் மேலே தான் இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டார்.
உடன்படிக்கை பெட்டியின் மேலே சிலுவை, இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டது.
நமக்கு ஓர் புதிய உடன்படிக்கையை தேவன் இந்த சிலுவையின் மூலமாக தந்தார்.
என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் எப்படி
ஒத்து போகிறது என்று....
இதனை பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள
http://www.6000years.org/frame.php?page=ark_of_the_covenant
10) தாவீது ராஜா - 1993 - Elah Valley in the Judean hills
*1993ன்று
வரை தாவீது ராஜா என்ற ஒருவர் இருந்ததற்கான சரித்திர ஆதாரம் இல்லாமல்
இருந்தது. இயேசுவை தாவீதின் குமாரன் என்று அழைக்கிறோம். ஆனால் சரித்திரம்?
Elah Valley பகுதியில் தான் தாவீது கோலியாத்தோடு சண்டை போட்டான். இந்த
பகுதியில் கிடைத்த ஓர் கல்வெட்டில் தாவீதின் வீடு என்ற ஓர் ஆதாரம்
கிடைத்தது. பிறகு நிலத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாவீது இருந்ததற்கு
அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.*
http://amazingbibletimeline.com/…/has-king-davids-palace-b…/
http://amazingbibletimeline.com/blog/david-and-goliath/
References: http://www.biblicalarchaeology.org/…/king-davids-palace-an…/
http://en.wikipedia.org/w/index.php…
http://en.wikipedia.org/wiki/Khirbet_Qeiyafa…
http://en.wikipedia.org/wiki/Khirbet_Qeiyafa
http://en.wikipedia.org/…/Alleged_King_David%27s_Palace_site
http://en.wikipedia.org/wiki/Large_Stone_Structure
http://www.haaretz.com/archaeology/.premium-1.543216 -
See more at: http://amazingbibletimeline.com/…/has-king-davids-palace-…/…
No comments:
Post a Comment