Sunday 17 June 2018

"சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே" பாடல் வரலாறு

138 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இடையன்குடி.தூய.திரித்துவ ஆலய பிரதிஷ்டைக்காக பேராயர். கால்டுவெல் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நெடும் பாரம்பரியமிக்க பாடல் "சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே" பாடலாகும். ஆனால் நாம் தற்போது பாமாலை, கீ.கீ. நூல்களில் பயன்படுத்துகிற அதில் இடம்பெற்றுள்ள இப்பாடலின் மொழிபெயர்ப்பு டோனாவூர் மிஷனரியாகவும் நற்போதகம் ஆசிரியராகவும்இருந்த Rev.உவாக்கர் ஐயரவர்களின் மொழிபெயர்ப்பு ஆகும். பேராயர்  கால்டுவெல் அவர்களது மொழிபெயர்ப்பே பழமையானது ஆனால் அதன் மொழிநடை வேறு.
தற்போது நடைமுறையில் உள்ள "சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே" மொழிபெயர்ப்பு பாடல் மிஷனரி உவாக்கருடையது.
உவாக்கர் ஐயரவர்களே எமி கார்மைக்கேல் அம்மையாரை பண்ணைவிளையில் இருந்து டோனாவூருக்கு பணி செய்ய அழைத்து வந்தவர் ஆவார். உவாக்கர் ஐயரவர்களின் மிகநெருங்கிய நண்பர் Rev.E.S.கார் மிஷனரி ஐயரவர்கள் ஆவார். உவாக்கர் மிஷனரியும் கார்மிஷனரியும் அப்போதைய பேராயர்.எட்வர்டு சார்ஜென்ற் அவர்களுக்கு மிக உதவிகரமாக இருந்தவர்கள். Rev.E.S.கார் அக்காலத்தில் பேராயர் பதவிக்கு இணையாக Administration Post ஆக இருந்த District Council Chairman ஆக பாளையங்கோட்டையில் நீண்டநாள் (1897 - 1915) பணிசெய்தவர் இவரது காலத்தில் தான் நம் நெல்லைத் திருமண்டலத்தின் தேவாலயங்களுக்கும் பள்ளிகளுக்கும் பெரும்பாலும் இடங்கள் வாங்கப்பட்டது அவற்றை முறையாகப் பத்திரப்பதிவு செய்து Tinnevelli Diocesan Property Register ஐ பராமரித்தவர் கார்மிஷனரியே. அந்த ரிஜிஸ்டரில் கார் மிஷனரியின் பெயரும் கையெழுத்தும் அதிகமிருப்பதை இன்றளவும் காணலாம் கல்லிடைக்குறிச்சி திருச்சபையை அதிகம் நேசித்து அங்கு இடம் வாங்கி பெரியதோர் தேவாலயத்தையும் கட்டியெழுப்பிய கார் மிஷனரி கல்லிடைக்குறிச்சி திருச்சபையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment