#ஜோசப் ஸ்கிரீவன்வின் சாட்சி#
1819- ல் அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலே இளமை கல்வியை முடித்தார்.பின்னர் டப்ளின் நகரில் திரித்துவ கல்லூரியில் பட்டம் பெற்றார். உடனே அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மண நாளுக்கு முன்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றை கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை
ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்தும் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்ற
ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அவரது மன நிலையும் பாதிக்கப்பட்டது.
இந்த
துயரத்தை மறக்க 1845-ம் ஆண்டு தனது 25-ஆம் வயதில் கனடாவுக்கு சென்றார்.
அங்கு நம்பிக்கை துறைமுகம் என்ற ஊரில் ஆசிரியராக பணியாற்றினார். மன நிலை
பாதிக்கப்பட்ட நிலையிலும் தெய்வ பக்தி நிறைந்தவராகவும், பிறருக்காக
வாழ்பவராகவும் விளங்கினார்.தன்னிடம் இருந்த பணத்தை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கு செலவு செய்தார்.
ஸ்கிரீவன்
ப்ளைமவுத் சகோதரர் என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு
பெண்ணை மணக்க விரும்பினார். மண நாளுக்கு குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு
முன்பு அந்த சபையில் சேரவிரும்பிய மண பெண்ணுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம்
கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது.
பின்னர் அதிக காய்ச்சல் வந்து அவள் மரித்து போனாள்.
இந்தத் திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பிய ஸ்கிரீவன்னின் தாய் தாங்க முடியாத துயரத்திற்குள்ளானார். தன் தாயாரை சமாதான படுத்த 1885-ல் ஒரு பாடலை எழுதினார். அந்த பாடல் தான்,
#பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்டர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்துசோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்,
#கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்பை
தீய குணம் மாற்றுவார்.
#பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்போது
புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.!!.
இந்த பாடலுக்கு ஸ்கிரீவன் கொடுத்த தலைப்பு,
''இடைவிடாமல் ஜெபம் பண்ணுவோம்'' இந்த பாடலை பார்த்த அவரது நண்பர் இந்த பாடலை இயற்றியது யார் என்று கேட்டார். அதற்கு ஸ்கிரீவன்
"#ஆண்டவரும் நானும் சேர்ந்தே இயேற்றினோம்."
என்று தாழ்மையுடன் பதிலளித்தார்.
#உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழ் பெற்றது.
தன்
வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம், வறுமை மற்றும் மன வியாகுலத்துடன்
களித்தனர்.இறுதியில் 1886-ம் ஆண்டு தமது 66-வது வயதில் நைஸ்லேக் என்னும்
ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து மூழ்கி மரித்துப் போனார்.!!!.
#மனநோயாளி
நிமித்தம் கர்த்தர் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் பாடலை
அளித்தார் என்றால்? தாலந்து படைத்த உங்களையும் கர்த்தர் இன்னும் மேன்மையாக
எடுத்து பயன்படுத்த மாட்டாரா?.!!.
"#கர்த்தருடைய கரத்தில் நம்மை அர்பணிப்போம், பெரிய காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்வாராக".!!.
#ஆமென்.!!!.
No comments:
Post a Comment